
அதிகமாகப் பசி எடுக்கும்போது தலை சுற்றல், மயக்கம் வருகிறது. ஆனால், அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருகிறதே... ஏன்?
பட்டினியாக இருக்கும்போது, ரத்தத்தில் குளுக்கோஸ் மளமளவென்று குறைந்து விடுகிறது. மூளைக்கு வழக்கமான அளவு குளுக்கோஸ் கிடைக்காவிட்டால் தலை சுற்றல், மயக்கம் என்று சில நாடகங்களை நடத்திக் காட்டும். இவை மூளை நமக்கு தரும் இன்ஸ்ட்ரக்ஷன். நாம் கண்டுக் கொள்ளாமல் இருக்கும் போது அது அட்ஜெஸ்ட் செய்துக் கொள்கிறது. மாறாக, நாம் அதிகமாகச் சாப்பிடும் போது, ரத்தஓட்டம் வயிற்றுக்குத் திரும்பி விடுவதால், மூளை ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்புகிறது. தூக்கம் கண்களைச் சுழற்றுகிறது.
மருந்து வகைகளில், நாம் உட்கொள்ளும் கேப்ஸ்யூல் உறை வயிற்றுக்கள்ளே சென்றது என்ன ஆகிறது?
கேப்ஸ்யூல் மாத்திரைகளின் மேலுறை ஜெலட்டின் என்ற புரதப் பொருளால் செய்யப் பட்ட சவ்வு. இது வயிற்றுக்குள் சென்றதும் அங்குள்ள அமிலம் மற்றும் ஜீரண நொதிகளின் செயலால் ஜீரணமடைந்து விடும். உடலுக்கு எந்தவித ஆபத்தும் செய்யாது. ஜெலட்டின் விலங்குகளின் குறுத்தெலும்பு, கொம்பு போன்ற பகுதியிலிருந்து கரைத்தெடுத்து சுத்தம் செய்யப்பட்டு எடுக்கப்படுகிறது.