sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

அர்ப்பணிப்பு!

/

அர்ப்பணிப்பு!

அர்ப்பணிப்பு!

அர்ப்பணிப்பு!


PUBLISHED ON : செப் 18, 2021

Google News

PUBLISHED ON : செப் 18, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார், சி.எம்.எஸ்.உயர்நிலைப் பள்ளியில், 1953ல் 11ம் வகுப்பில் படித்தபோது, தலைமை ஆசிரியராக இருந்தார் ஜி.ஐ.மாணிக்கவாசகம். கோட், சூட், டை அணிந்து ஹிட்லர் மீசையுடன் திரைப்பட நடிகர் போல் இருப்பார்.

அவரை, 'ஐயா' என்று தான் அழைக்க வேண்டும்; ஆங்கிலத்தில், 'சார்' என சொல்லக்கூடாது.

அன்பு, நேர்மை, நேரம் தவறாமையின் மறு உருவமாக இருந்தார். ஜாதி, சமய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர். படிப்பு மற்றும் விளையாட்டில் சிறந்தவர்களை ஊக்குவித்து பாராட்டுவார்; ஒழுக்கம் தவறினால் தண்டிப்பார். தினமும் காலை இறை வழிபாட்டுக் கூட்டத்தில் இவற்றை நிறைவேற்றுவார்.

பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு விடுதி கட்டணம், 11 ரூபாய் தான். சலவைக் கூலி, முடி வெட்டும் கூலி, வாரம் தவறாமல் எண்ணெய் தேய்த்தல் போன்ற செலவுகளும் இதில் அடங்கும். தகுதியானவர்களுக்கு, ஊக்க தொகை பெற்று கொடுப்பார்.

இவரது உதவி மற்றும் கண்டிப்பால் உயர்ந்தவர்கள் பலர். தமிழக சபாநாயகராக இருந்த காளிமுத்து, மதுரை மேயராக இருந்த பெ.சீனிவாசன் ஆகியோர் இவரது மாணவர்கள். இவரது வழிகாட்டுதலால் படித்து, அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன்.

என் வயது, 85; அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அந்த தலைமை ஆசிரியர் நினைவை போற்றுகிறேன்.

- கு.மகாலிங்கம், விருதுநகர்.

தொடர்புக்கு: 97906 25406






      Dinamalar
      Follow us