PUBLISHED ON : ஜூலை 29, 2023

காரில் சென்று கொண்டிருந்தார் பணக்காரர். சாலை ஓரம் இருந்த ஒருவர் புல் சாப்பிடுவதை பார்த்தார். வியப்புடன் காரை நிறுத்தி, ''எதற்காக புல் சாப்பிடுகிறீர்...'' என்று வினவினார் பணக்காரர்.
''ஐயா... நான் ஏழை. உணவு வாங்க பணம் இல்லை; எனவே, புற்களை உண்கிறேன்...''
''சரி... என் வீட்டிற்கு வாருங்கள். உணவு தருகிறேன்...''
''ஐயா... மரத்தடியில் என் மனைவி, நான்கு குழந்தைகள் இருக்கின்றனர்...''
அனைவரையும் காரில் ஏற்றி வீட்டுக்கு புறப்பட்டார் பணக்காரர்.
பயணத்தின் போது, ''ஐயா... உங்களுக்கு மிகவும் இளகிய மனசு...'' என்றார் புல் சாப்பிட்டவர்.
''ஆமாம்... நீங்கள் எல்லாம் புற்களை தின்பது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. என் வீடு, அமைந்துள்ள இடம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். அங்கே பெரும் பரப்பில் புல் வளர்ந்துள்ளது. தாராளமாக, அதை நீங்கள் சாப்பிடாலம்...''
பணக்காரர் பேச்சு கேட்டு, புல் சாப்பிட்டவர் அதிர்ந்து போனார்.
குழந்தைகளே... எல்லா வகை பேச்சையும் நம்பி விடக்கூடாது!
- ஜி. ராஜா
