PUBLISHED ON : ஜூன் 03, 2011

அடிப்படை உண்மைகள்!
வடகாற்று காடுகள் என்பது பூமியின் வட அரை உருண்டையில் காணப்படும். வட துருவத்தில் இருந்து தொடங்கி 3200 கி.மீ (2000 மைல்கள்) உள்ளது. இந்த காடுகளில் பெரும் பாலும் கூம்பு போன்ற காய் காய்க்கிற மரங்கள் தான் இருக்கும். அதோடு சில பெரிய, அகல கடின இலைகளை கொண்ட பூச்ச மரங்களும் காணப்படும்.
மேலே குறிப்பிட்ட வட பகுதியை போல தென் பகுதி மரங்களை இப்படி இருக்கும் என வரையறை செய்ய முடியாது. தென் பகுதியில் எல்லா வகை மரங்களும் காணப்படும். இந்த காடுகள், இயற்கையின் கொடையாகும். இவை தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் தென் துந்துரா பகுதியில் படர்ந்து உள்ளது. சில இடங்களில் ஆர்டிக்கின் பகுதிகளிலும் எட்டி பார்க்கும். வட பகுதியை போன்ற இயற்கையின் வெவ்வேறு மரங்கள் தென் பகுதியில் இல்லை.
என்ன ஒரு அற்புதம்!
இந்த வடகாற்று காடுகளில் உலகின் மூன்றின் ஒரு பங்கு மரங்கள் வாழ்கின்றன. இந்த பச்சை பசேல் இயற்கையின் பரப்பு 16.6 மில்லியன் கி.மீ. (6.4 மில்லியன் சதுர மைல்கள்.) சுருக்கமாக சொல்வதென்றால் உலகின் நிலப் பரப்பில் பத்தில் ஒரு பகுதி இக்காடுகளே.
கூம்பு காய்கள்!
கூம்பு போன்ற காய்களை தரும் மரங்களே இக்காடுகளில் பெரிதும் காணப்படுவதற்கு, இம்மரங்களின் பனி மற்றும் ஐஸை தாங்கும் தன்மைதான் காரணம். இம்மரங்களின் கிளைகள் கூம்பாகவும், மெல்லியதாகவும், கீழ் நோக்கி இருப்பதாலும் அவற்றில் பனி தங்க முடிவ தில்லை. அப்படியும் பனிப்பொழிவு அதிக மாகும்போது, ஏராளமாக படியும் பனியினால் கிளைகள் ஒடிவதில்லை. அதற்கு பதில் கிளைகள் மேலும் கீழ் நோக்கி தழைய, பனி தரையில் விழுந்து விடும். பெரும்பாலான இப்பகுதி மரங்கள் பனிக்காலத்தில் தங்கள் இலைகளை உதிர்ப்பதில்லை. லார்ச் மரம் மட்டும் தன் இலைகளை உதிர்த்து விடும்.
கூம்பு மர காடுகள் குறுக்கு வெட்டு அலகு!
ஊசி இலை மரங்களின் விதைகள் முதிர்வு அடைய அதிக காலம் எடுப்பதால், அந்த மரங்கள் தன் விதைகளை மிக கடினமான மர கூம்புகளில் வைத்திருக்கும். இந்த தன்மை பெரும்பாலான பறவைகள் விதைகள் தின்னுவதை தடுக்கிறது. ஆனால் குறுக்கு வெட்டு அலகு பறவைகள் கடின கூம்புகளை கிழித்து திறந்து விதைகளை உண்டுவிடும்.
அற்புத கருவி!
இந்த குறுக்கு வெட்டு பறவைகளுக்கு அதன் அலகுகளின் முனைகள் ஒன்றன் மேல் ஒன்றாக இருக்கும். இந்த அமைப்பு லேசாக விரிசல் விட்டுள்ள விதை கூம்புகளை பிளந்து திறப் பதற்கு உதவுகிறது. பிளந்த பின் தன் நீண்ட நாக்கால் விதையை அடைந்து உண்கின்றன.
உயிருடன் இருப்பதற்காக!
இந்த காட்டில் குறுகிய வெயில் காலமும், நீண்ட கடின குளிர் காலமும் நிலவும். இதை சமாளிக்க விலங்குகள், நீண்ட காலம் உணவின்றி வாழ வேண்டும் அல்லது காட்டை காலி செய்ய வேண்டும். பாலூட்டிகள் குளிர் காலத்தை தாக்கு பிடிக்க, அக்காலம் வருவதற்கு முந்தைய மாதங்களில் ஏராளமாய் உண்ணும். அதனால், அவைகள் நன்கு பெருந்துவிடும். பின்னர் குளிர் காலத்தில் பாதுகாப்பான இடமாக பார்த்து நீண்ட கால உறக்கத்தில் ஆழ்ந்துவிடும். தன் பணிகளை பெரும்பாலும் குறைத்து கொள் வதால் குறைவாகவே சக்தி தேவைப்படும். தேவைப்படும் சக்தி, சேகரிக்கப்பட்ட கொழுப்பிலிருந்த பெறப்படும். ஆனால் பெரும்பாலான பறவைகள், தென் பகுதிகளுக்கு பயணப்பட்டு விடும். ஏனெனில், அங்கே குளிர் இந்த அளவுக்கு கடுமையாக இருப்பதில்லை.
பல்வேறு வகை உணவு உண்ணிகள்!
கரடிகள் பல்வேறு வகை உணவுகளை உண்டு, இந்த காட்டு வாழ்க்கையை கடத்து கிறது. நரைத்த முடிகள் உடைய கரடிகள் விதைகள் முதல் அழுகிய பிணங்கள் வரை எதையும் உண்ணும்.
மண்ணின் அடுக்குகள்
இந்த காட்டு பகுதி 10 ஆயிரம் வருடங் களுக்கு முன்பு பனி பிரதேசத்தின் கீழே நிலம் இருந்தது. பின் அப்பகுதி காடான போது பூமியில் ஒரு நதி பாதை உருவாகி இருந்தது. இதனால் பனி உருகி வரும் நீர், மழை, நீர் ஆகியவை பூமியை அடைந்து, அப்பகுதி எப்போதும் நீர் தேங்கிய பகுதியாக நிலை பெற்று விட்டது. நீர் தேங்கிய நிலை மற்றும் குளிர் காரணமாக மரத்திலிருந்து விழுபவை மக்கி போக வெகு காலமாகிறது. இதனால் செடியின் மக்கி போன பொருட்கள் தரையின் மேல் பகுதியை ஆக்கிரமிக்கிறது. இந்த பொருட்களின் ஊடே புகும் நீர் அமிலமாகி பூமியில் இருக்கும் தாதுபொருட்களை திரவ நிலையில் கசிய செய்கிறது. இதனால் தரையில் வெள்ளை நிற மேல் மண் அமைகிறது. இது மிக சத்து குறைவான மண்ணாகும்.
வேர்கள் பரப்புதல். இப்பகுதி மரங்களின் வேர்கள் பூமியின் மேலே பரவியிருக்கும். மேற்பகுதி குப்பையும், உரமும் கசிந்த திரவங்களால் ஆன மேற்பகுதி தாதுபொருட்கள் சேரிக்கப்பட்ட அடுக்கு, இரும்பு சத்து, சீதோஷ்ண நிலைக்கான பொருள்களை சீதோஷ் ணத்தின் எதிர் நிலையான பொருட்கள்.
காட்டின் தரைப்பகுதி!
மிக மிக குறைவானவையே இப்பகுதி மரங்களின் கிளைகளுக்கு கீழே உயிர் வாழ் கின்றன. சூரிய ஒளி கிடைக்காமல், தரையின் மேற்பகுதி கடின பழுப்பு நிற பொருட்களால் மூடப்பட்டு இருக்கும். இது போன்ற அமைப்பில் புதிய தாவர வளர்ச்சி சாத்தியமற்று போகிறது. பாசி மட்டுமே அதிக அளவில் தப்பி வளர்கிறது. மக்கிய பொருட்களிலிருந்து காளான்களும் வளர்கின்றன. இப்பகுதியில் செடிகளை உண்ணும் விலங்குகள் காண்பதரிது.
கேப்பர் கெய்லீ பறவை மட்டும் இங்கு உண்டு. இப்பறவையின் வயிறு, பிசின் உடைய மற்றும் கடின தன்மை உடைய இப்பகுதி மர பொருட்களை ஜீரணிக்க செய்யும் தன்மை யுடையது. பிற தாவர உண்ணிகளான பெரிய மான் வகை, பெரிய அகன்ற இலைகளுடன் காணப்படும் மர வகைகளினால் உயிர் வாழ் கின்றன. இலை கடின குளிரில் ஒன்றுமே கிடைக்காதபோது மரப்பட்டைகளை உண்டு உயிர் வாழும்.
