தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நாவை துண்டிக்கணும்!

நாவை துண்டிக்கணும்!

நாவை துண்டிக்கணும்!


PUBLISHED ON : ஜூன் 03, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரசர் ஜெயசிம்மன் அன்றைய அரசவை வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார். அவருடைய மகன் ஆத்திரத்துடன் அங்கு வந்தான். அவன் முகம் கோபத்தால் சிவந்து இருந்தது.

''தந்தையே! தங்களின் படைத் தலைவரின் மகன் என் தாயாரை இழிவாகப் பேசி விட்டான்!'' என்றான்.

அவன் கண்களில் தீப்பொறி பறந்தது. அமைச்சர்களைப் பார்த்து அரசர், ''இப்படி இழிவாகப் பேசியவனுக்கு என்ன தண்டனை தரலாம்?'' என்று கேட்டார்.

''மதிப்பிற்குரிய நம் அரசியாரையே ஒருவன் இழிவாகப் பேசி விட்டானே... அவனைக் கொல்வதுதான் இதற்கு தகுந்த தண்டனை!'' என்றார் ஓர் அமைச்சர்.

''இப்படிப் பேசிய அவன் நாவைத் துண்டிக்க வேண்டும்!'' என்றார் இன்னொரு அமைச்சர்.

''இப்படிப் பேசிய குற்றத்திற்காக அவனுடைய சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்ய வேண்டும். அவனை நாட்டை விட்டே விரட்ட வேண்டும்!'' என்றார் மற்றோர் அமைச்சர்.

அவர்கள் சொன்ன தண்டனைகளைக் கேட்டுச் சிரித்தார் அரசர்.

''நீங்கள் மூவர் சொன்ன தண்டனைகளும் சரி அல்ல!'' என்றார்.

தன் மகனைப் பார்த்து, ''உன் தாயை இழிவாகப் பேசியவனை நீ மன்னித்துவிடு. அப்படி மன்னிக்க உன் உள்ளம் இடம் தரா விட்டால் அவனுடைய தாயை நீ இழிவாகப்பேசு. அப்படிப் பேசும் போது ஒன்றை நன்றாகக் கவனத்தில் வைத்துக் கொள். அவன் எந்த அளவு உன் தாயை நிந்தித்தானோ அதே அளவுதான் நீயும் நிந்திக்க வேண்டும்.

''சிறிது அதிகமாக நீ பேசி விட்டாலும் உன் மீது குற்றம் சுமத்திக் கடுமையான தண்டனை தருவேன். ஒன்றை நினைவில் வைத்துக் கொள். மதம் பிடித்த வலிமை வாய்ந்த யானையை அடக்குபவன் ஆண் மகன் அல்லன்; எந்தச் சூழலிலும் கோபத்தை அடக்கத் தெரிந்தவனே ஆண் மகன்!'' என்றார்.

தந்தையின் அறிவுரைகளைக் கேட்ட அவன், ''தந்தையே! நான் திருந்தி விட்டேன். இனி எதற்கும் கோபப்பட மாட்டேன். என் தாயை இழிவாகப் பேசியவனை மறந்து மன்னித்து விட்டேன்!'' என்றான். மகனின் கோபத்துக்கு முற்றுப்புள்ளி வைத்ததை நினைத்து மகிழ்ந்தார் அரசர்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us