தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு

அதிமேதாவி அங்குராசு

அதிமேதாவி அங்குராசு


PUBLISHED ON : ஜூன் 03, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வந்தேமாதரம்! என் தாய்நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!

சப்பாத்தியா - இட்லியா!

ஒரு ரயில் பயணம். அந்த பெட்டியில் இருவர் போய் கொண்டிருந்தார். அதிலே பயில்வான் மாதிரி ஒருத்தர். நோஞ்சானாக ஒருத்தார் இருந்தார். திடீரென்று, குளிர்காற்று அடித்தது. குளிரை போக்க நோஞ்சான் ஜன்னலை அடைக்க பார்த்தார். அவரால் முடியவில்லை.

அந்த குண்டன் 'டக்' என்று ஜன்னலை அடித்து விட்டு சொன்னான். 'கோழி சாப்பிடணும்; முட்டை சாப்பிடணும்; சப்பாத்தி சாப்பிடணும்' என்று அவன் முண்டாவை காட்டினான்.

பிறகு, ஒரு பெட்டியை தூக்கி மேலே வைக்க முயற்சி செய்தான் நோஞ்சான். அவனால் முடியவில்லை; விட்டுவிட்டான்.

அந்த குண்டு பயில்வான் பெட்டியை மேலே தூக்கி வைத்துவிட்டு,'சப்பாத்தி சாப்பிடணும்; கோழி சாப்பிடணும்; முட்டை சாப்பிடணும், என்று மறுபடியும் முண்டாவை காட்டினான்.

அவன் பார்த்தான். இப்படியே போனால் நம்மை பல நேரத்தில் அவமானப்படுத்தி விடுவான் என்று ஒரு தந்திரம் செய்தான். நேரே போய் ரயிலின் அபாய சங்கிலியை இழுக்கிற... மாதிரி பாவனை செய்தான் முடியவில்லை.

பயில்வான் பட்டென்று ஒரு இழு இழுத்தான். ரயில் நின்றது.

அதிகாரிகள் மற்றும் காவலர்கள் எல்லாம் வந்து விட்டனர். 'யார் இழுத்தது?' என்று கேட்டனர். அந்த ஆள் 'நான் தான்!' என்று பெருமையுடன் சொன் னான்.

'ஆயிரம் ரூபாய் அபராதம்,' இல்லை என்றால் மூன்று மாத ஜெயில் தண்டனை என்ன வேண்டும்? என்று கேட்டனர்.

நோஞ்சான் ஆள், 'இட்லி சாப்பிடணும்; தோசை சாப்பிடணும்... என்று ஏளனத்துடன் தலையை தொட்டு காண்பித்து சொன்னான்.

அடடே! அடேயப்பா!

1. பூமியில் உள்ள 25 உயர்ந்த மலைகளில் 19மலைகள் இமயமலை பகுதியில் உள்ளது.

2. நம் வீட்டில் காணப்படும் ஈக்களின் ஆயுள் காலம் இரண்டே வாரங்கள்தான்.

3. லத்தீன் மொழி எழுத்துக்கள் மொத்தம் 21 தான்.

4. பிறந்த குழந்தை அழும்போது கண்ணீர் வராது.

5. தண்ணீரும் எண்ணெயும் ஒன்றோடு ஒன்று கலக்காதுதானே. ஆனால், அவற்றை கலக்க முடியும். எப்படி? அவற்றுடன் கொஞ்சம் சோப்பு தண்ணீரை கலந்து பாருங்கள்.

கப்பலும் - கொடியும்!

கறுப்பு கொடி ஒரு கப்பலில் பறந்தால், அது கடற்கொள்ளைகாரர்களின் கப்பல். சிவப்பு கொடி பறந்தால், அது புரட்சிக்காரர்களின் கப்பல். வெள்ளை கொடி பறந்தால் அது எதிர்படும் எந்த கப்பலோடும் சமாதானமாக இருக்க விரும்புகிறது என்று பொருள். மஞ்சள் கொடி பறந்தால்? தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றி செல்கிறது என்று பொருள். அதை பார்த்ததுமே மற்ற கப்பல்கள் (கறுப்பு கொடி கப்பல் உட்பட ஓடிவிடுமாம்)

மரம் வளர்க்கும் அணில்கள்!

அணில்கள் விதைகளை, பிறகு சாப்பிடலாம் என்று நினைத்து புதைக்கும் பழக்கம் கொண்டவை. ஆனால், எங்கே புதைத்து வைத்தோம் என்பதை மறந்து விடுகின்றன. அவ்வளவு தான் அவைகளின் ஞாபகசக்தி. உலகெங்கிலும் இலட்சக்கணக்கான மரங்கள் தானாகவே முளைப்பதற்கு இதுவே காரணம் என்று மதிப்பிடப்படுகிறது.

பழமும் குணமும்!

ஆப்பிள், வயிற்று போக்கு, சீதபேதி, சிறுநீரக கோளாறுகள், இதய நோய்கள் ஆகியவைகளுக்கு நல்லது. நாவல் பழம் நீரிழிவு, வாய்ப்புண், வயிற்று புண்ணை நீக்கும். கொய்யாப்பழம், உடல் வளர்ச்சியையும் எலும்புகளுக்கு பலமும் தரு கின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும். சிவப்பு திராட்சை, தோல் வியாதியை போக்கும். திராட்சை, எலுமிச்சை, மலச்சிக்கலை போக்கும். பப்பாளி, ஆரஞ்சு, மூல வியாதிகாரர்களுக்கு நல்ல பயன் தரும். திராட்சை, சாத்துக்குடி ரத்த அழுத்தத்திற்கு நல்லது.

ரத்தம் - உயிர் காப்பாற்றும்!

ஆண்கள் தங்கள் எடையில் கிலோவுக்கு 26 மில்லி லிட்டர் பெண்கள் 1 கிலோவுக்கு 18 மில்லி லிட்டர். அந்த அளவுக்கு தேவைக்கு அதிகமாகவே ரத்தத்தை உடலில் கொண்டிருக்கின்றனர். இதில் கிலோவுக்கு 8 மில்லி லிட்டர் வீதம் ஒருவர் ரத்தத்தை தானமாக கொடுத்தால், அவருக்கு எந்த தீங்கும் வராது. ரத்த தானம் செய்த பிறகு ரத்தத்தின் நீர் பகுதி (92%) இரண்டே நாட்களிலும், அணுக்கள் பகுதி 21 நாட்களுக்குள்ளும் மீண்டும் உடலுக்கும், எந்த மருந்தும் உணவும் இன்றியே கிடைத்து ரத்தம் ஊறிவிடுகிறது. விலை மதிப்பற்ற மனித உயிர்களை காப்பாற்ற ரத்ததானம் மிகவும் அவசியம்.

ஜோன் ஆப் ஆர்க் ஆகணும்!

உலகிலேயே வலிமையான சக்தியில் ஒன்று நம் குறிக்கோளின் மீது நம்பிக்கை. 'ஜோன் ஆப் ஆர்க், ஆடு மேய்த்த சிறுமி. ஆனால், அவளுக்கு பிரான்சின் படைகளுக்கு தலைமை தாங்கி சென்று, இங்கிலாந்து நாட்டுடன் போர் செய்ய வேண்டும் என்ற வெறி! அப்போது அந்த பெண்ணுக்கு 17 வயதுதான். அந்த பெண் பிரெஞ்சு மன்னரிடம் (சார்லஸ்) சென்று தான் கொண்ட குறிக்கோளையும், நம்பிக்கையும் கூறினார். மன்னரும் அவளது நம்பிக்கையை பாராட்டி தலைக்கலசம் அளித்ததோடு படையொன்றையும் அவருடன் அனுப்பி வைத்தார். வெற்றியும் கண்டாள். மனஉறுதி இருந்தால் எதிலும் வெற்றி பெற முடியும் என்பதற்கு, 'ஜோன் ஆப் ஆர்க்' மிக உதாரணம்.

நம் முன்னாள் பிரதமர் இந்திரகாந்தி அவர்களிடம் அவருடைய ஆசிரியர், 'நீ யாரை போல வர வேண்டும் என்று கேட்ட கேள்விக்கு, அவர் நான் ஜோன் ஆப் ஆர்க்கை போல் வர வேண்டும். அவரை போல படை நடத்தி செல்ல வேண்டும் என்று பதில் கூறியுள்ளார்.

போர், புரட்சி என்பதெல்லாம் ஆண்களுக்கு மட்டுமே அல்ல... ஆணுக்கு பெண் சமம். இந்திய நாடு 2020-ம் வருடம் உலகின் நம்பர் -1 நாடாக வேண்டும். பெண்கள் மிக கடின வேலையை கூட எளிதாக செய்வார்கள்.

சமீப காலமாக பெண்கள் சிறிது சிறிதாக குடும்பம், அன்பு செலுத்துதல் ஆகியவற்றில் இருந்து விலகி கொண்டு இருக்கின்றனர். பெண்ணை போல அன்பு செலுத்த ஆணால் முடியாது. பெண்ணை போல குடும்பம் வளர்க்க ஆணால் முடியாது. விண்ணேரி வானத்தை வென்றாலும் உலகத்தின் அஸ்திவாரம் அன்பும், குடும்பமும் தான்.

பெண்களே அன்பையும், குடும்பத்தையும் உங்கள் கரங்களில் உலகம் கொடுத்து இருக்கிறது. அதாவது, உலகமே உங்களை நம்பி இருக்கிறது. ஆணும், பெண்ணும் அன்பு செலுத்தி, குடும்பத்தை பேணினால்தான் உலகம் உயிர்த்து இருக்கும்.

தமிழே! அமுதே!

அதிகமான நாடுகளில் பேசப்படும் இந்திய மொழி தமிழ்தான். அதே மாதிரி அங்கீகரிக்கப் பட்டுள்ள இந்திய மொழியும் தமிழ்தான்!

அன்புடன் அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us