
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
கருப்பு எள் - 150 கிராம்
காய்ந்த மிளகாய் - 6
பூண்டு - 3 பல்
புளி, தேங்காய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
எள் தானியத்தை சுத்தம் செய்து, வறுக்கவும். அதனுடன், காய்ந்த மிளகாய், துருவிய தேங்காய், பூண்டு, உப்பு, புளி, சேர்த்து அரைக்கவும்.
சுவை மிக்க, 'எள் துவையல்!' தயார். சாதத்துடன் பக்க உணவாக சாப்பிடலாம். சத்துக்கள் நிறைந்தது.
- ஞா.அருள்மலர்செல்வி, சிவகங்கை.