
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தண்ணீரால் சூழப்பட்ட ஒரு சிறிய பகுதியை தீவு என்கிறோம். ஆனால், சில தீவுகள் விசித்திரமான சில விலங்குகளால் உருவாக்கப் படுகின்றன. சுத்தமான மற்றும் ஆழமற்ற உப்புத் தண்ணீரில், மிதமான வெப்பநிலை உள்ள இடங்களில் வாழும் விலங்குகளுக்கு தலையும், காலும் இருக் காது. அவற்றை, 'பாலிப்ஸ்' என்றும் அழைப்பர். இவை சேர்த்து வைக்கும் கால்சியம் பவழப்பாறைகளுடன் கலந்து விடும். இந்த முறை தொடர்ந்து நடை பெறும் போது ஒரு புதிய தீவு உண்டாகும்.
நிலநடுக்கோட்டின் இரு பக்கங்களிலும் உள்ள வெப்பமண்டலக் கடலில், இந்த பவழத் தீவுகள் காணப்படும். ஆஸ்திரேலியாவின் வடகிழக்குக் கடற் கரைப் பகுதியில் இந்தத் தீவுகள் அதிக மாகக் காணப்படும். பர்முடாஸ் மற்றும் பேகமஸ் என்ற இரண்டு பவழத்தீவுகள் மிகவும் அழகாக இருக்கும். இவற்றைக் கண்டுகளிக்க சுற்றுலாப் பயணிகள் இந்தத் தீவுகளுக்கு அதிகமாகச் செல்வர்.

