PUBLISHED ON : அக் 18, 2019

அ நிறம் | அளவு
மத்திய தரைக்கடல் பகுதியை, தாயகமாக கொண்டது கொத்துமல்லி. ஆப்ரிக்கா கண்டம், சூடான், எகிப்து நாடுகளில் இயற்கையாக வளர்கிறது.
இந்தியாவில், பஞ்சாப், மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், மத்தியப்பிரதேசம், ஆந்திரா, தமிழகம் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.
இதில்,'கோரியான்டிரல்' என்ற எண்ணெய் உள்ளது; அதனால், நறுமணம் கமழ்கிறது.
கொத்துமல்லி இலைச் சாற்றை, நெற்றியில் பற்றாக போட்டால், தலைவலி குறையும். கொத்துமல்லி விதை, மருந்தாக பயன்படுகிறது; முகப்பருவை கட்டுப்படுத்தும்.
உணவு தயாரிப்பில் சுவையூட்டியாக பயன்படுகிறது. மசாலாத்துாள், ஊறுகாய் தயாரிப்பில், விதை முக்கிய இடம் வகிக்கிறது. போதை அடிமைகளை மீட்கவும் உதவுகிறது கொத்துமல்லி.
