தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/குட்டி ஜப்பான்!

குட்டி ஜப்பான்!

குட்டி ஜப்பான்!


PUBLISHED ON : அக் 18, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 18, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பட்டாசு என்றாலே, சிவகாசி தான், நினைவுக்கு வரும்; இதை, 'குட்டி ஜப்பான்...' என்பர். இந்த பெயரில் முதலில் அழைத்தவர், நம் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தான்.

கிழக்காசியாவில் உள்ள ஜப்பானியர்கள் போல, இங்குள்ள மக்கள் சுறுசுறுப்பாக இயங்குவதே இதற்கு காரணம்.

சிவகாசி நகரம், விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது. அச்சுத்தொழில் வளர்ச்சியில், இதை, 'குட்டி ஜெர்மனி' என்பர். நம் நாட்டில், அச்சு சம்பந்தமான, 60 சதவீத பணிகள், இங்கு தான் செய்யப்படுகிறது.

தீப்பெட்டி தயாரிப்பு, அச்சுத் தொழில், பட்டாசு தயாரிப்பு என, பம்பரமாக சுழல்கிறது சிவகாசி நகரம். இதை சுற்றியுள்ள கிராமங்களிலும், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிப்பு, குடிசை தொழிலாக நடக்கிறது.

தீபாவளி பண்டிகை நெருங்கும் போது, பட்டாசு தயாரிப்பு பரபரப்பாகி விடும்.

விழாக்களில் பயன்படுத்தும், காட்சி பட்டாசுகள் அதிகம் தயாரித்து, உள்நாட்டு சந்தையிலே விற்கப்படுகிறது. ஏற்றுமதியில், ஆசிய நாடான சீனாவுடன் போட்டியிட முடியவில்லை. உலக அளவில், பட்டாசு உற்பத்தியில், சீனா தான் முதலிடம் வகிக்கிறது.

பழைய காகிதம், வேதிப் பொருட்களான கந்தகம், வெடிஉப்பு, அலுமினியம் மற்றும் சணல், அட்டைப் பெட்டிகள், கண்ணைக் கவரும் வண்ணப் படங்களை பயன்படுத்தி, பல ரக பட்டாசுகள் தயாராகின்றன.

பாதுகாப்பாக, வேதிப் பொருட்களைக் கலந்து, காகிதக் குழாய்களில் நிரப்பி, திரி இணைத்து, சர வெடி முதல், வர்ண ஜாலம் காட்டும் வாண வேடிக்கை பட்டாசு வரை தயாரிக்கின்றனர். அவை, தீபாவளி பண்டிகையை ஒட்டி சந்தைக்கு வரும்.

சிவகாசியில், 1960ல் பட்டாசு தொழிற்சாலைகள் துவங்கப்பட்டன; தொழில் திறனும், உழைக்கும் மனப்பான்மையும், இத்தொழிலை பல்கி பெருக வைத்துள்ளது. நம் நாட்டுக்கு தேவையான, 80 சதவீத தீப்பெட்டியும், 90 சதவீதம் பட்டாசும் இங்கு தான் தயாராகிறது.

இங்குள்ள பட்டாசு ஆலைகளில், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க, தக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us