PUBLISHED ON : மே 04, 2018

அ நிறம் | அளவு
தேவையானப் பொருட்கள்:
சோளம் - 500 கிராம்
உளுந்து - 100 கிராம்
வெந்தயம் - 2 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
சோளம், உளுந்து, வெந்தயம், இவற்றை ஊற வைத்து, தோசை மாவு பதத்துக்கு அரைத்து, உப்பு சேர்த்து, ஐந்து முதல், ஆறு மணி நேரம் புளிக்க வைத்து, தோசையாக ஊற்றி எடுக்கவும்.
இதில், மாவுச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து நிறைந்துள்ளன. சத்தான சோள தோசை குழந்தைகள் வளர்ச்சிக்கு நன்கு உதவும்.
- எஸ்.சடையப்பன், திண்டுக்கல்.
