தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்... மனஸ்...! (111)

இளஸ்... மனஸ்...! (111)

இளஸ்... மனஸ்...! (111)


PUBLISHED ON : மே 04, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 04, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு சகோதரி ஜெனிபருக்கு, சிறுவர்மலர் இதழின் வாசகி எழுதிக் கொண்டது. சமீப காலமாகத்தான், படிக்க ஆரம்பித்து, இவ்விதழின் 'விசிறி' ஆகி விட்டேன்.

எனக்கு, இரண்டு மகள்கள்; எட்டு, ஒன்பது வகுப்புகள் படிக்கின்றனர். 'லீவு' விட்டாச்சு... இருவரும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வீடியோஸ், சினிமா என, மூழ்கிக் கிடக்கின்றனர். கண்டித்தால், 'இவ்ளோ நாள் கஷ்டப்பட்டு படித்தோமே, இப்போ நாங்க, ஜாலியா இருக்கக் கூடாதா... ஏன், உயிர வாங்குறீங்க...' என்கின்றனர்.

பாட்டு, டான்ஸ், கராத்தே, ஸ்விம்மிங், செஸ் என, ஆயிரம், 'சம்மர்' வகுப்புகள் உள்ளன. எதிலாவது, சேர்த்து விட விரும்புகிறேன். அவர்களை கேட்டால், ஆளாளுக்கு ஒன்று சொல்கின்றனர். நீங்க தான், 'பெஸ்டா' சொல்வீங்க... அதனால், உங்களிடம் கேட்கிறேன். எந்த வகுப்பில் சேர்த்தால், நல்லது என, சொல்லுங்க சகோதரி!

அன்பு சகோ... என் மீது, தாங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. உங்க மகள்களின் விருப்பங்கள், திறமைகள் எதில் வெளிப்படுதோ, அவற்றில் சேர்ப்பது தான், நல்லது. நாம் விரும்புவதை, அவர்களிடம் திணித்தால், பணம் தான் வேஸ்ட்; அவர்கள், விரும்பும் வகுப்புகளுக்கு அனுப்பினால், ஆர்வமுடன் கற்பர்.

என்னை கேட்டால், இந்த சம்மர் வகுப்புகள் எல்லாம் எதற்கு என்பேன். தினமும், 5:00 மணிக்கு எழுந்து, 7:00 மணிக்கு, ஸ்கூல் பஸ்சில் ஏறி, மீண்டும் ஸ்பெஷல் க்ளாஸ், டியூஷன் என அல்லாடி, இரவு, 7:00 மணிக்கு வீட்டுக்கு வந்து படித்து, பெற்றோரின், 'பிரஷர்' ஒரு பக்கம், பள்ளியில், 'மிஸ்'களின், 'பிரஷர்' மறுபக்கம் என, 'மென்டல் டார்ச்சர்' அனுபவித்து, இப்ப தான் ஓய்ந்துள்ளனர்.

இருப்பதே, 40 நாட்கள் தான். இந்த வெயில் கொடுமையில், பிள்ளைகள், துாங்கி, சற்று, 'லேட்'டாக, 8:00 மணிக்கு எழுந்திரிக்கட்டும்; அவர்கள் படுத்த பெட், தலையணைகளை மடித்து, அழகாக வைக்கச் சொல்லுங்கள்.

பக்கத்து வீட்டு பிள்ளைகளுடன், மாலையில் விளையாடி மகிழட்டும்; மதிய வேளையில், உங்கள் மகள்களுக்கு, கொத்துமல்லி, பச்சை மிளகாய் போட்டு, மோர் கலக்குவது, எலுமிச்சை, புதினா ஜூஸ் கலக்குவது எப்படி என்று கற்றுக் கொடுங்கள். சாப்பிட்ட தட்டுகளை, வாஷ்பேஷனில் போடுவது, டைனிங் டேபிள் சுத்தம் செய்வது, வீட்டை சுத்தமாக பராமரிப்பதற்கு கற்றுக் கொடுங்கள்.

'ப்ளாட்'டில் வசித்தால், இரவில் சில குடும்பங்களாக சேர்ந்து, பிள்ளைகளுடன் அமர்ந்து, சாதத்தை பிசைந்து, உருண்டையாக, கொடுத்து, சாப்பிட்டு மகிழுங்கள். மொட்டை மாடியில், இப்படி, 'என்ஜாய்' செய்து பாருங்களேன்; உங்கள் பிள்ளைகள், புது புது விஷயங்களை, ரொம்ப 'ப்ரீயா' உங்களுடன் பகிர்ந்துக் கொள்வர்.

'மால்'களுக்கு சென்று, சினிமா பார்த்து, பணத்தை கரைப்பதை விட, குடும்பங்களாக சேர்ந்து, பெரிய ஸ்கிரீன் உள்ள வீட்டில், பிள்ளைகளுடன், பிடித்த படங்களை போட்டுப் பாருங்கள்.

அப்போது, ஒவ்வொரு ஆன்டியும், 'ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்' செய்து, ஷேர் பண்ணி சாப்பிடுங்க. ரொம்ப ஜாலியா இருக்கும்; பணமும் மிச்சம். தாத்தா, பாட்டி இருந்தா, அவர்களோடு குழந்தைகளை கொஞ்சம் நேரம், செலவிட சொல்லித் தாருங்கள்.

மாலை நேரத்தில், மகள்களை, எளிதான ஸ்நாக்ஸ் தயாரித்து, தரச் சொல்லுங்க; 'நெட்'டை பார்த்து செய்து அசத்துவர்.

கப்போர்ட்ஸ், புக் ஷெல்ப், பீரோ அவங்க ரூம் இவற்றை, யார் அழகா வெச்சிக்கிறாங்களோ, அவங்களுக்கு, 'கிப்ட்' கொடுத்து, 'என்கரேஜ்' செய்து, குடும்ப பொறுப்புகளை, 'ஸ்லோவா' சொல்லிக் கொடுங்கள்.

அப்போதுதான், திருமணம் ஆகி செல்லும் போது, பொறுப்புள்ள மருமகள்களாக இருப்பர். இதை விட்டு விட்டு, பல்வேறு திறமையுள்ளவர்களாக, இவர்களை வளர்த்து, குடும்பத் தலைவிக்குரிய குணங்களை கற்றுக் கொடுக்க மறப்பதால் தான், திருமணம் ஆன, ஒன்று, இரண்டு ஆண்டுகளிலேயே, விவாகரத்துக்கள் பெருகுகிறது.

பெண் பிள்ளைகள் குறித்தான காரியங்களை, ஆண் பிள்ளைகளுக்கு சொல்லித் தர வேண்டும்; தற்போது, பெண் குழந்தைகளுக்கு விரோதமாக நடக்கும் கொடுமைகளை பார்க்கும் போது, உள்ளம் நடுங்குகிறது.

பெற்ற தகப்பனை கூட, நம்ப முடியாத சூழலில் வாழ்கிறோம். எனவே, ஒரு தாயாக, இந்த காரியங்களை, வெளிப்படையாக, பிள்ளைகளிடம் பேசுங்க; இவர்களை நல்ல குடிமகன்களாக வளர்ப்பது பெற்றோராகிய நம்முடைய பொறுப்பு. தற்காப்பு கலை வகுப்பு இருந்தால், மகள்களை அனுப்புங்க. தற்போதைக்கு, அது தான் மிக மிக முக்கியம்!

- அன்புடன், ஜெனிபர் பிரேம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us