தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கைவினை கரையேல்!

கைவினை கரையேல்!

கைவினை கரையேல்!


PUBLISHED ON : ஆக 10, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 10, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம்! பள்ளிக்கு புதிய தலைமை ஆசிரியர், கல்யாணராமன் வந்தார்; மிகவும் கண்டிப்பானவர்; சிறந்த சமூக ஆர்வலர். மாணவ, மாணவியரிடம், 'முடிந்த அளவு சமூக தொண்டு செய்யுங்கள்...' என வலியுறுத்துவார்.

பள்ளி வளாகத்தில், ஒரு கிணறு இருந்தது. அதில், அடிக்கடி தண்ணீர் வற்றி விடும். குடிநீருக்கு, மிகவும் கஷ்டப்படுவோம். இதை பார்த்த தலைமை ஆசிரியர், அந்த கிணற்றை, துார்வாரி சுத்தம் செய்தார். பக்கத்தில் இருந்த, கட்டடத்தின் மொட்டை மாடியில், பெரிய குழாயை பதித்தார். அந்த குழாயின் மறுமுனை கிணற்றுக்குள் வரும்வகையில் பொருத்தினார்.

மழை பெய்யும் போது, மொட்டைமாடி தண்ணீர், வீணாகாமல், கிணற்றில் விழுந்தது. அதன்பின், அந்த கிணறு வற்றியதே இல்லை; தாராளமாக தண்ணீர் கிடைத்தது.

ஒருநாள் இறைவணக்க கூட்டத்தில், 'இது தான் மழைநீர் சேகரிப்பு முறை. மழை நீர் வீணாகாமல், கிணற்றிலோ, நிலத்தடியிலோ சேமித்தால், நிலத்தடி நீர் மட்டம் உயரும். தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதை தவிர்க்கலாம்' என அற்புதமாக சொற்பொழிவாற்றி மாணவர் மனதில் பதிய வைத்தார்.

இப்போது, எனக்கு வயது, 50; மழைநீர் சேமிப்பு முறையை, 30 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்திய அந்த தலைமை ஆசிரியரை மறக்க முடியவில்லை.

கோடை வந்தால், அவர் நினைவு தான். மழைநீரை சேமித்தால், தண்ணீர் பஞ்சத்தை தவிர்க்கலாம்.

- ஆர்.அபிதா, காஞ்சிபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us