தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கீழ்மை அகற்று!

கீழ்மை அகற்று!

கீழ்மை அகற்று!


PUBLISHED ON : ஆக 10, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 10, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த, 2002ல் தேனி மாவட்டம், கஸ்துாரிபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பில், சரியாக படிக்காமல், பொழுதை போக்கிக் கொண்டிருந்தேன். தேர்வு வந்தது!

'எப்படி எழுதப் போகிறோமோ...' என்ற பயத்தில், எனக்கு முன் அமர்ந்திருந்த தோழியிடம், 'விடைத்தாளை காட்டு...' என்று கேட்டேன். அவள், சம்மதித்தாள்.

ஆனால், அந்த விடைத்தாளை, பார்த்து எழுத பயமாக இருந்தது; அஞ்சி நடுங்கினேன்.

எனக்கு முன், வரிசையில் ஒருத்தி, புத்தகத்தை பார்த்து, காப்பி அடித்துக் கொண்டிருந்தாள். அதை ஆசிரியர் கவனித்து விட்டார். கையும் களவுமாக பிடித்து, தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தார்.

அவளை பள்ளியில் இருந்து நீக்கப் போவதாக, நிர்வாகம் கூறியது. அவள், பெற்றோரை அழைத்து வந்தாள். அவளது அம்மா, தலைமை ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்டு அழுதார். 'இனி தவறு செய்ய மாட்டாள்...' என உறுதி கூறினார்.

அப்போது தான், என் தவறை உணர்ந்தேன். 'இனி, காப்பி அடிக்க முயற்சிக்க கூடாது' என்று முடிவு எடுத்தேன்.

காப்பி அடித்திருந்தால், நானும் சிக்கி இருப்பேன்; பெற்றோருக்கு, அவப்பெயர் தேடி தந்திருப்பேன். அதை நினைத்து வருந்தினேன். தேர்வில், தெரிந்ததை எழுதி, கிடைக்கும் மதிப்பெண்ணை ஒப்புக் கொள்வது தான் நல்லது என உணர்ந்தேன். அதன்பின், மனசாட்சிக்கு உண்மையாக செயல்பட்டு, ஆர்வமுடன் படித்து முன்னேறினேன். தற்போது என் வயது 32. இன்றும், இந்த சம்பவத்தை, இன்னும் மறக்க முடியவில்லை.

- நா.புவனேஸ்வரி, தேனி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us