PUBLISHED ON : டிச 02, 2011

வாசனையும் வாலாட்டும் தோழர்களும்
இன்றைய போலீஸ்துறை குற்றவாளியை கண்டுபிடிக்க அதிநவீன தொழில்நுட்பத்தை குற்றக்காட்சி இடத்தில் பயன்படுத்தி 'க்ளூக்களை கண்டுபிடிக்கிறது. ஆனால், என்னவெல்லாம் எப்படியெல்லாம் மாறினாலும் ஒரு விஷயம் மட்டும் மாறவில்லை; மாறவும் மாறாது அது 'பவ்-வவ் பாப்பா பிடிக்கும் மோப்பம்தான். மனிதனின் தோழனாக கூறப்படுவது இந்த நாய்கள். இவைகளில் 'ப்ளட்ஹவுண்ட்' என்ற வகையிடம் மிக அதிகபட்ச வாசனை உணரும் திறன் உண்டு. இவைகள் பழக்கப்பட்டால், ஆதாரங்களை, தடயங்களை அற்புதமாய் கண்டுபிடிக்கும். மோப்ப தோழர்கள் பல காலங்களாக போதை பொருளை கண்டுபிடிக்கவும், ஓடும் குற்றவாளியை துரத்தி பிடிக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதோடு இவை வெடிப்பொருளை மற்றும் நெருப்பை ஏற்படுத்தும் பொருள்களையும் கண்டுபிடிக்கும் இவைகளின் பெரிய செயல்பாடு என்பது குற்றக்காட்சியில் கொலை செய்யப்பட்டு மறைக்கப்பட்ட உடலை கண்டுபிடிப்பதுதான் இவை, இவ்வேலையை மிக விரைவாக செய்யும். அதுமட்டுமில்லை உடலின் துண்டுகளை கூட இவை விரைவாக கண்டுபிடிக்கும்.
நாலுகால் நண்பர்கள்!
குற்றக்காட்சியில் சில ஆதாரங்கள் கண்ணுக்கு தெரிவதில்லை. உதாரணமாக, மனிதர்கள் விட்டு செல்லும் அடையாளம். ஒவ்வொரு மனிதனும் தோல் செல்கள், தலைமுடி, வியர்வை மற்றும் உடல் எண்ணெய்கள் போன்ற மனிதன் விட்டு செல்லும் அடையாளங்களை தோழர் கண்டு பிடித்துவிடுவார். இந்த தோழரால் பழைய மற்றும் புதிய வாசனையை எளிதில் வேறுபடுத்தி அடையாளம் காண முடியும்.
மோப்பத்தால் தேடுகிறார்கள்!
சில குற்றவாளிகள் உடலினை மறைக்க படாதபாடு படுவார்கள். 2001-ஆம் ஆண்டு, பிலிடெல்பியாவை சேர்ந்த 36 வயது ஜீம்ஸ்கி காணாமல் போனார். அவரை அவர் கணவன் கொன்றிருந்தான். யாரும் கண்டுபிடிக்கக்கூடாது என்பதற்காக மனைவியை புதைத்த இடத்தில் பெரிய பெரிய சிமெண்ட் ஸ்லாபுகளை போட்டான். பின்னர் ஸ்டீல் பார்களை கொண்ட சிமெண்ட் சுவரை எழுப்பினான். பலமாதங்களுக்கு பின் ஜீம்ஸ்கியை தேட தோழர்களை அழைத்து வந்தது போலீஸ். ஜீம்ஸ்கியின் உடல் பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்டு, பூமியில் ஆழமாக புதைக்கப்பட்டு, பின் மேலே சுவர் எழுப்பப்பட்டு இருந்தது, தோழர் அந்த உடலின் வாசத்தை கண்டுபிடித்து குரைத்து காட்டி கொடுத்தது. போலீஸ் பூமியை தோண்டி உடலை எடுத்தது. அந்த கொடியவன் கிம்பர்லி கைது செய்யப்பட்டான்.
துப்பறியும் நிபுணரின் மூக்கு!
சில குற்றக்காட்சி துப்பறியும் நிபுணர்கள், வாசனைகளை ஒரு அட்டையில் சேமிக்கும், இயந்திரத்தை வைத்து இருப்பர். இந்த இயந்திரத்தில், வாசனை சேகரிக்கப்பட்டு தேவையெனில் பல வருடங்கள் கழித்தும் அந்த வாசனையை வழக்கிற்கு பயன்படுத்த இயலும். அந்த வாசனையை சேமிக்க பின் அவ்வாசனை நாயிடம் மோப்பம் பிடிக்க கொடுக்கப்படும். இப்போது தோழரின் பணி, வாசனைக்கு உரியவரை 'லபக்' என பிடிப்பதுதான் வாசனை மோப்பம்!
