PUBLISHED ON : நவ 25, 2011

உங்கள் பற்கள் உங்களை பற்றி நிறைய தகவல்களை தரும். அதே பற்களை ஒரு பல் டாக்டர் பரிசோதித்து இருந்தால் இன்னும் நிறைய தகவல்களை அவர் உங்களை பற்றி தருவார். ஏனெனில் பல் டாக்டர் தாங்கள் பரிசோதித்த நபரின் பற்களை பற்றிய முழு ரிப்போர்ட்டை கவனமாய் வைத்து இருப்பார்.
பற்களின் வடிவம், அமைப்பு, இடைவெளி, அவை அமைந்த கோணம், அவைகளில் உள்ள மாதிரிகள் என ஒரு மனிதரின் கைரேகைகளை போல் பற்களின் விவரங்களும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஒரு குற்றக்காட்சி நபரின் பற்களை பற்றிய விவரங்களை பல் டாக்டர் வைத்துள்ள ரிப்போர்ட்டுக்களை கொண்டு பொருந்தி பார்ப்பர். இதே போல குற்றவாளியையும்...
ஒரு குற்றவாளியின் பற்கள், அவனை பற்றிய க்ளூவை தரும். பற் கடி அச்சின் மூலம் க்ளூ கிடைக்கும். ஒரு ஆப்பிளில் பதிந்த பற்கடியின் அடையாளம் ஒரு குற்றவாளியின் பல்லின் அடையாளத்தோடு பொருந்தி பார்க்கலாம். எச்சிலை வைத்தும் குற்றவாளியை அடையாளம் காணலாம்.
அகோரப்பசி அயோக்கியர்கள்!
சில சமயம் குற்றவாளி தனது பற்கடி அடையாளத்தை குற்றக்காட்சியில் விட்டு விட்டு சென்றுவிடுவான். பற்கடியை வைத்து அதை ஏற்படுத்திய வரை எளிதாக கண்டுபிடிக்கலாம். பல திருடர்கள் தங்களின் பசியை பொறுத்து கொள்ள முடியாமல் ஏதாவது அவசர அவசரமாக தின்றுவிட்டு ஓடுவர். உதாரணத்திற்கு ஒரு ஆப்பிள் பசிக்காக தின்றுவிட்டு, முழுவதும் தின்னாமல் விட்டுவிட்டு போவர். இந்த ஆப்பிளின் மிச்சம், குற்றக்காட்சியில் கிடைக்க பெற்றால், துப்பறியும் நிபுணர் எளிதாய் குற்றவாளியை கண்டுபிடிப்பார்.
பொக்கை வாயாய் மாறினாலும்...
ஒரு சண்டையில் ஒரு குற்றவாளி தனது எதிரியை கடித்துவிடலாம். பற்கடிகள் போலீஸிற்கு கீழ்கண்ட தகவல்களை தரும்.
1.குற்றவாளியின் வாயின் அளவு.
2.அவன் வாயில் ஆடும் அல்லது உடைந்த பற்கள் உண்டா.
3.பல்லின் அகலம் மற்றும் தடிமன்.
4.இடைவெளி அல்லது இல்லாத பற்கள்.
5.கடிக்கும் முனைகளின் அமைப்பு.
6.அவன் பல்லில் ஏதாவது பல் சிகிச்சை நடந்து உள்ளதா?
7.இந்த ஆதாரங்கள் ஒருவனை குற்றவாளி என நிரூபிக்க போதுமானது.
பல் டாக்டரை கூப்பிடுவோம்!
போரன்சிக் பல் டாக்டர்கள் குற்றக்காட்சியில் கிடைக்கும் பற்கடிகளை ஆராய்வர். அதை பார்த்து அது மனிதனுடையதா விலங்கினதுடையதா என்பதை டாக்டர் சொல்வர். அந்த பற்கடியிலிருந்து அந்த அடையாளத்திற்கான அச்சை உருவாக்கி, அதன் மூலம் ஒவ்வொரு விவரத்தையும் அறியலாம். கம்ப்யூட்டர் உதவியுடன் ஒரு சந்தேக நபரின் கடியை வைத்து பற்களின் அமைப்பு அளவு கோணம் என அனைத்தையும் அறிவர். முனை உடைந்த அல்லது உடைந்த பற்களின் விவரம், பல் கடி அச்சு மூலம் கிடைக்கப் பெற, பல் டாக்டரின் நோயாளிகள் ரிப்போர்ட் மூலம் அவை பொருந்தி பார்க்கப்படும். ஒரு குற்றவாளி தன் பற்கடியை குற்றக்காட்சியில் விட்டுவிட்டான். அவற்றை அழிக்க நினைத்தான் எப்படித் தெரியுமா? கார்மின் கலாப்ரோ என்ற அந்த குற்றாவளி தன் எல்லா பற்களையும் எடுத்து விட்டான். இதன் மூலம் தான் தப்பிக்கலாம் என்று நினைத்தான். ஆனாலும் மாட்டிக்கிட்டான்.
ஒவ்வொரு பல்லின் அளவு மற்றும் பற்களுக்கு இடையேயான இடைவெளி ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.
தொடரும்.
