PUBLISHED ON : மார் 21, 2020

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
சீரக சம்பா அரிசி - 250 கிராம்
தேங்காய் பால் - 2 கப்
முந்திரி - 100 கிராம்
வெல்லம் - 500 கிராம்
நெய் - 2 தேக்கரண்டி
ஏலப்பொடி - சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
சீரக சம்பா அரிசியை, சுத்தம் செய்து, இரண்டு லிட்டர் தண்ணீர் சேர்த்து வேக விடவும். பின், தேங்காய் பாலை ஊற்றவும். இது கொதித்ததும் உருண்டை வெல்லத்தை நன்றாக பொடி செய்து கலக்கவும்.
நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலப்பொடி கலந்து இறக்கவும். சுவைமிக்க, 'சீரக சம்பா பாயாசம்' தயார். வித்தியாசமாக இருக்கும்; புத்துணர்ச்சி தரும். சிறுவர், சிறுமியர் விரும்பி சாப்பிடுவர்.
- வி.புஷ்பமாலதி, திண்டுக்கல்.
தொடர்புக்கு: 88071 46036
