தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பொறாமை குருவி!

பொறாமை குருவி!

பொறாமை குருவி!


PUBLISHED ON : மார் 21, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 21, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொன்னேரி வானத்தில், மிக உயரத்தில் பெருமிதமாக வட்டமடித்துக் கொண்டிருந்தது கருடன். ஆலமரக் கிளையில் அமர்ந்திருந்த இரண்டு குருவிகள் இதைப் பார்த்தன.

'கருடனைப் போல, அவ்வளவு உயரத்தில் பறக்க முடியவில்லையே' என்று, ஏக்கம் கொண்ட ஒரு குருவி, 'நமக்கு இறக்கை இருந்து என்ன பயன்; பறந்தால், அந்த கருடனைப் போல, அவ்வளவு உயரத்துக்கு செல்ல வேண்டும்; இல்லா விட்டால், இறக்கையை எரித்து, சாவதே மேல்...' என்றது.

அறிவும், அனுபவம் நிறைந்த இன்னொரு குருவி, 'நண்பா... குருவிகளாகப் பிறந்து இருப்பதால், இன்னொரு குருவியைப் பார்த்து, ஏக்கம் கொண்டால் பொருள் உண்டு; கருடனைப் பார்த்து, பொறாமைப்படுவதால் பயன் இல்லை...

'நம் வாழ்வில் என்ன குறை உள்ளது; சிறிய இறக்கைகளின் திறனுக்கு ஏற்ப பறந்து மகிழ்கிறோம். ஆமை, தவளை போன்ற உயிரினங்களால் பறக்கவே முடியாது; அதைப் பார்த்து ஆறுதல் கொள்; இருப்பதைக் கொண்டு, மகிழ வேண்டும்; பிறரைப் பார்த்து பொறாமைப்பட்டால், நிம்மதியை இழக்க வேண்டியது தான்... எனவே, தவறான எண்ணத்தை கைவிடு...' என்று, அறிவுரை கூறியது.

சற்று நேரம் யோசித்த குருவி, 'நீ சொல்வது சரி தான்; பொறாமை என்பது, எலும்புருக்கி நோய் போன்றது; அது, முற்றினால், உயிரை அழித்து விடும். மற்றவர்களைப் பார்த்து பொறாமை படுவதை விட்டு விட்டேன்... கிடைத்ததை வைத்து, திருப்தி அடைவேன்...' என்றது.

செல்லங்களே... இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வது தான் சிறப்பு... இல்லாததை நினைத்து ஏங்கினால் வம்பு தான் வரும்... சரியா!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us