PUBLISHED ON : ஆக 13, 2010

அ நிறம் | அளவு
நியூயார்க்க மக்கள், 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 'குட் ரிடன்ஸ் டே' கொண்டாடினர். அதாவது வேண்டாத பேப்பரை எரிக்கும் விழா. ஆயிரக்கணக்கான மக்கள் ஒரு இடத்தில் கூடி பழைய ஆவணங்கள், கடிதங்கள், போட்டோக்களை பேப்பர் வெட்டும் மிஷினில் போட்டு வெட்டி, தூக்கி எறிந்து பழைய பொருட்களுக்கு குட்பை சொல்லிவிட்டு புதிய வருடத்தை தொடங்குகின்றனர். நம்மூரில் பொங்க<லுக்கு முந்தைய நாள் போகிப் பண்டிகையாக கொண்டாடுகிறோமே... அதே அதேதான்.
ரோம் நாட்டில் புத்தாண்டு அன்று மக்கள் மது அருந்திவிட்டு வேகமாக வண்டி ஓட்டுவதால் ஏற்படும் விபத்தை தடுக்க, விபத்தில் இறப்பவர்களுக்கு இலவசமாக ஈமசடங்கு நடத்த அரசு ஒரு மயாணத்தை ஏற்பாடு செய்திருக்கிறது. அப்படியாவது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் திருந்துவார்கள் என எதிர்பார்க்கிறது அரசாங்கம்.
