PUBLISHED ON : ஏப் 18, 2014

அ நிறம் | அளவு
* குடையோடு பறந்த பெண்!: சீன நாட்டில் ஒரு கிராமத்தில் புயல் வீசிக் கொண்டிருந்த சமயம் ஒரு சீனப் பெண் வயலிலிருந்து குடை பிடித்தவாறு திரும்பிக் கொண்டிருந்தாள். புயல் காற்று அப்பெண்ணை அப்படியே விரித்த குடை யோடு அலாக்காகத் தூக்கி சென்று சிறிது நேரத்தில் உயரத்திலிருந்து பொத் தென்று போட்டது. பெரிதாக அடி எதுவும் படவில்லை. அநேகமாக, சாதாரணக் குடையைக் கொண்டே பறந்த பெண் இவளாகத் தான் இருக்க வேண்டும்.
* ஷாஜகானிடம் காலிக்தாத் என்ற பட்டத்து யானை இருந்தது. அவுரங்கசீப், ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டு ஷாஜகானை சிறையிலிட்டார். காலிக்தாத் தாஜ்மகாலின் முன்பு கண்ணீர் விட்ட படியே படுத்தது. ஷாஜகான் சிறைப்பட்ட கோட்டையி லிருந்து தாஜ்மகாலைப் பார்த்தபடியே உயிர்விட்ட அதே நாளில், அதே நேரத்தில் தாஜ்மகாலைப் பார்த்தபடியே உயிரை விட்டது காலிக்தாத்.
