PUBLISHED ON : ஏப் 18, 2014

அ நிறம் | அளவு
நேரு, பெட்ராண்டு ரஸ்ஸலை சந்தித்த போது, ''சைபர் நாட்டிலிருந்து வருகிற உங்களை நான் வரவேற்கிறேன்,'' என்றார் ரஸல்.
'ஒன்றுமில்லாத நாட்டிலிருந்து வருகிறவர் நீங்கள்' என்று ரஸல் கூறுவது போல இருந்தது. ஒரு கணம் திகைத்தார் நேரு.
ரஸல் விளக்கினார். ''கணித சாஸ்திரத்தில் பெரிய மேதைகளைப் பெற்ற நாடு உங்களுடையது. சைபர் என்கிற எண்ணை கண்டு பிடித்து உலகத்துக்கு கொடுத்ததே இந்தியாதான். அந்தப் பெருமையை நினைவு படுத்தும் வகையில்தான் அப்படிச் சொன்னேன்,'' என்றார். இதைக் கேட்டதும் மிகவும் மகிழ்ந்தார் நேரு.
