தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/குட்டீஸ் கார்னர்

குட்டீஸ் கார்னர்

குட்டீஸ் கார்னர்


PUBLISHED ON : ஜூன் 26, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 26, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒற்றை தலைவலியா!

கொஞ்சம் ஓமத்தை சிவக்க வறுத்து அதை நைஸா பொடியாக்கி பாட்டில்ல போட்டு வச்சுக்கணும். ஒற்றை தலைவலி எந்தப் பக்கம் வருதோ அதுக்கு எதிர்பக்க மூக்கு துவாரத்திலே ஒரு சிட்டிகை நிறைய ஓமத்தூளை எடுத்து நல்லா உறிஞ்சிடணும். இப்படி இரண்டு தடவை செய்தாலே வலி ஓடிவிடும்.

காதுல எறும்போ, பூச்சியோ போயிட்டா கால் ஸ்பூன் சமையல் உப்பை 4 ஸ்பூன் சுத்தமான தண்ணியிலே கரச்சு அதில் பஞ்சை நனைச்சு காதிலே 3 சொட்டு பிழிஞ்சு விட்டு, தண்ணி குர்ருன்னு உள்ளே போறப்போ தலையை கவிழ்த்தா, உள்ளே போனது வெளியே வந்திடும். இல்லேன்னா தேங்காய் எண்ணெய் 4 சொட்டு காதில விட்டாலும் உள்ள போனது செத்துபோய் வெளியே வந்து விடும். வெறுந் தண்ணிய மட்டும் ஊத்தவே கூடாது.

பூரான் கடிச்ச இடத்தில் கொஞ்சம் குப்பை மேனி இலையோட துளி உப்பு, ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் வச்சு அரச்சு பூசினா குணமாயிடும். அதோட ஒரு வெத்திலயிலே 9 மிளகை வச்சு நல்லா மென்னு திண்னாலுல், விஷம் முறிஞ்சு போயிடும்.

* ஓயாது அழும் குழந்தைக்கு கசகசாவை மைபோல் அரைத்து குழந்தையின் தொப்புளைச் சுற்றித் தடவினால், அழுகையை நிறுத்தி விடும் குழந்தை.

* வேனல் கட்டி போக, சந்தனக் கட்டையை எலுமிச்சம் சாறு விட்டு உரைச்செடுத்து, கட்டி மேலே கனமா பத்து போட்டா குணமாகிவிடும்.

* பிரசவிக்கக் கஷ்டப்படும் பெண்களுக்கு 60 மி.லி., சுத்தமான தேனை குடிக்கக் கொடுத்தால், கஷ்டம் குறைந்து உடனே குழந்தை பிறக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us