
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்ஸ்... நோ... நோ...
ஒட்டகச்சிவிங்கி நாவாலே காதுகளை சுத்தம் செய்து கொள்ளும். எப்படி தெரியுமா?
இதன் நாக்கு சுமார் 21 அங்குலம் நீளம் கொண்டது. சில நேரங்களில் ஓர் அடிக்கும் அதிகமாக நாக்கு நீள்வதும் உண்டு. ஸோ, 'பட்ஸ்'சே தேவை யில்லை குட்டீஸ்...
ஹையோ மணல் புயல்!
ஒட்டகங்களின் கண்களைப் பாதுகாக்க நீண்ட இமை முடிகள் உள்ளன. இவை தவிர, கூடுதலாக மெல்லிய இமையும் இருக்கின்றன. காரணம், பாலைவனத்தில் அடிக்கடி மணல் புயல் வீசும். அப்போது கண்களைப் பாதுகாத்துக் கொள்ள இந்த இமை அவசியமாகிறது. அதே போல், மூக்கை மூடிக் கொள்ளவும் சதைப் பகுதி இருக்கிறது. சின்னஞ்சிறு காதுகளைப் பாதுகாக்க, சின்னச்சிறு முடிகள் ஏராளமாக காதுகளைச் சுற்றி அமைந்துள்ளன.
ஆஹா... என்னவொரு அற்புதமான படைப்பு!