
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவைப்படும் பொருட்கள்!: கலர் மெழுகுவர்த்திகள், கலர் நூல்கள், கலர் பாசி மணிகள், அழகிய கலர் வடிவங்கள்.
1. கலர் நூல்களை எடுத்து அதில் அழகாக பாசிமணிகளை கோர்க்கவும். பெரிய வடிவங்களை நடுவில் வரும்படி கோர்க்கவும்.
2. இந்த நீண்ட நூலின் இடை, இடையே சிறிய துண்டு நூல்களில் வண்ண பாசிமணிகளை கோர்த்து இணைத்துக் கொள்ளவும்.
3. இப்போது பெரிய மெழுகுவர்த்தியை சுற்றி இந்த நூலை கட்டிவிடவும். சிறிய மெழுகுவர்த்தியாக இருந்தால், சம இடைவெளியில் அழகான வடிவங்களை ஒட்டி அழகுபடுத்துங்கள்.
அழகு, அழகு மெழுகுவர்த்திகள் ரெடியா? எந்த கடையில் வாங்கினீங்கன்னு கேட்பாங்க தெரியுமா?