PUBLISHED ON : மே 13, 2011
குத்துச்சண்டைப் போட்டியில், 'உலக சேம்பியன்' பட்டம் பெற்ற சுசில் குமாருக்கு டெல்லியிலுள்ள குத்துச்சண்டை சங்கம் அவரது உடல் ஆரோக்கியத்தை பாதுக்காக்க 100 எருமை மாடுகளையும், 100 கிலோ நெய் மற்றும் 100 கிலோ வாதுமை கொட்டைகளை பரிசாக வழங்கி கவுரவித்தது.
அப்படிபோடு அருவாளை!
ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் தினமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் முடி, ஆயிரம் கிலோவுக்கும் அதிகமாக வருகிறது. இந்த முடியை 'விக்' தயாரிப்பவர்களுக்கு விற்பதன் மூலம் கோவிலுக்கு ஆண்டுக்கு 60 லட்ச ரூபாய் வரை கிடைக்கிறது.
இங்கிலாந்திலுள்ள நகரில் தெருக்களை அசுத்தம் செய்வர்களையும் கண்டுப்பிடிக்க ஆங்காங்கே தனியார் துப்பறியும் நிறுவனத்தினர் மூலம் தெருக்களில் பல்வேறு பகுதியில் கேமரா பொருத்தி கண்காணிக்கின்றனர். செல்ல பிராணிகளை வளர்ப்பவர்கள் தங்கள் செல்லப்பிராணியை கொண்டு தெருக்களை அசுத்தப் படுத்தியவர்களும் கையும், களவுமாக மாட்டினர். இதனால் தெருக்கள் இப்போது 'ப்ளீச், ப்ளீச்' என காணப்படுகிறது.
