PUBLISHED ON : மே 13, 2011

வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!
ஆளப்போவது யார்?
இன்று மே-13. தமிழக சரித்திரத்தில் மிக முக்கிய நாள். ஆம். நம்மை ஜனநாயக முறைப்படி ஆளப்போகும் 'முதல்வர்' யார் என நாம் அறியப்போகும் நாள்!
அடிக்கடி கரண்ட் கட், கின்னஸ் சாதனை ஊழல், ராக்கெட் வேக விலைவாசி என சாதாரண மக்களும் அறிந்திருந்த அவதிப்பட்ட விஷயங்கள் நம் முன் பிரதான விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றன. 'மாற்றம்' என்பதுதான், இந்த தேர்தலின் பிரதான விஷயமாக இருந்தது.
பிரீமியர்!
தமிழக சட்ட சபைக்கான முதல் பொது தேர்தல் நடந்தது 1920-ம் ஆண்டு. தமிழக முதலமைச்சர், 'பிரீமியர்' என்றும் 'பிரதம மந்திரி' என்றும் அப்போதெல்லாம் அழைத்தனர். அன்று முதல் இன்று வரை தமிழக முதலமைச்சர்களாக இருந்தவர் யார் யார்?
இதோ அந்த குறிப்பு...
முதல் 'முதல்'!
'திவான் பகதூர்' அகரம் சுப்பராயலு ரெட்டியார் (17.2.1920 முதல் ஜூலை 1921 வரை), 1920-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி தமிழக சட்டசபைக்கு முதன்முதலாக முதலமைச்சராக பதவியேற்றார். உடல்நிலை காரணமாக தமது பதவியை ஏழே மாதங்களில் ராஜினாமா செய்தார்.
பனகல் ராஜா!
பனகல் ராஜாவின் முழுப் பெயர்! 'ராஜா ராமராயநிங்கர்' உடல்நிலை காரணமாக தமது பதவியை இடையிலேயே ராஜினமா செய்துவிட்டு சென்றார். இவரது பதவிக்காலம் 11.7.1921 முதல் 3.12.1926 வரை.
மூன்றாவது!
டாக்டர் பி.சுப்பராயன். இவரது பதவிக்காலம் 4.12.1926 முதல் 27.10.1930 வரை.
நான்காவது!
'பொலினி' முனுசாமி நாயுடு. இவரது பதவிக்காலம் 27.10.1930 முதல் 4.11.1932 வரை.
ஐந்தாவது!
பொப்பிலி ராஜா. இவரது பதவிக்காலம் 5.11.1932 முதல் 4.4.1936 மற்றும் 25.8.1936 முதல் 31.3.1937 வரை. மூன்றாண்டுகள் ஆட்சி நடத்திய பிறகு திடீரென உடல்நலமின்றி போய் சிகிக்சை பெற்று, மீண்டும் பதவியில் அமர்ந்தார்.
அவருக்கு பதில் இவர்!
'பொன்னம்பல தியாகராஜன் ' என்பது பி.டி.இராஜனுடைய முழுப் பெயர் (4.4.1936 முதல் 24.8.1936 வரை) பொப்பிலி ராஜா சிகிச்சைக்கு சென்ற நாட்களில் இவர் பிரீமியராக பதவியில் இருந்தார்.
மூன்றரை மாதங்கள்!
இடைக்கால மந்திரி சபையில் கே.வி.ரெட்டி என்ற கூர்மா வெங்கட ரெட்டி நாயுடு மூன்றரை மாதங்கள் பிரீமியர் பதவியில் இருந்தார். இவரது பதவிக்காலம் 1.4.1937 முதல் 15.7.1937 வரை.
ராஜாஜி!
ˆசன்னை சட்டசபைக்கு பிரீமியராக சக்கரவர்த்தி ராஜாகோபாலாச்சாரியர் என்ற முழுப் பெயருடைய ராஜாஜி1937-ம் ஆண்டு பதவிப் பிரமாணம் ஏற்றார்.சுமார் இரண்டு ஆண்டுகள் வரை பிரீமியராக ஆட்சி நடத்தினார். இரண்டாம் உலக மாக யுத்தத்தின் காரணமாக பிரிட்டீஷாருக்கும், மகாத்மா காந்திக்கும் கருந்து வேறுபாடுகள் ஏற்பட்டு, காந்திஜி பதவியில் இருப்பவர்கள் மற்றும் டெல்லி சட்டசபையில் உள்ளவர்கள் அனைவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்கு ஏதிராக தனி நபர் சத்யா கிரகத்தில் ஈடுபட வேண்டும் என அறிக்கை வெளியிட்டார். அதை தொடர்ந்து, ராஜாஜி தமது பதவியை ராஜினாமா செய்தார்.
போரால் ஆள்பவர் இல்லை!
இரண்டாவது உலக மகா யுத்தம்... நாடெங்கும் 'அவசர நிலை பிறப்பித்து இருந்தனர் பிரிட்டீசார். 1939 நவம்பர் முதல் 1946 ஏப்ரல் வரை நாடெங்கும் இந்த தேர்தல்களும் நடைபெறவில்லை. இந்த காலத்தில் தமிழகத்தில் பிரீமியர் யாரும் இல்லை.
அமைச்சரவை கவிழ்ந்தது!
காங்கிரஸ் கட்சியை சார்ந்த டி.பிரகாசம் 30.4.1946 முதல் 23.3.1947 வரை பதவியில் இருந்தார். அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவரது அமைச்சரவை கவிழ்ந்தது.
காலை அவிழ்ப்பு மாலை பதவியேற்பு!
டி.பிரகாசம் அமைச்சர் அவை கலைக்கப்பட்ட அதே தினம் பிற்பகல், ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப் பட்டார். இவரது பதவிக்காலம் 23.3.1947 முதல் 6.4.1949 வரை.
பாரதம் குடியரசானது!
ராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜா முதலமைச்சராக இருந்த சமயம்தான் (7.4.1949 முதல் 9.4.1952 வரை) பாரதம், 'குடியரசு' ஆனது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும் அமலுக்கு வந்தது. அந்த சட்டத்தின்படி 1952-ம் ஆண்டு மார்ச் மாதம் முதன்முதலாக பொது தேர்தல் நடக்க இருக்கவே, பி.எஸ். குமாரசாமி ராஜா பதவியில் இருந்து விலகினார்.
கல்விக்காக!
ராஜாஜி இரண்டாம் முறையாக (10.4.1952 முதல் 13.4.1954 வரை) முதல்வரனார். 1953-ம் ஆண்டு இறுதியில் ராஜாஜி அவர்கள் கொண்டு வந்த புதிய கல்வி திட்டத்தை சட்டசபையில் பலர் எதிர்த்தனர். இந்த திட்டம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நான் இங்கு முதலமைச்சராக பதவியில் இருந்து ஆள்வது நியாயம் இல்லை என்று ராஜாஜி தம் பதவியை ராஜிமானமா செய்தார்.
பெருந்தலைவர்! கு.காமராஜர்
(13.4.1954 முதல் 12.4.1957 வரை, 13.4.1957 முதல் 14.3.1962 வரை, 15.3.1962 முதல் 1.10.1963 வரை.)
மூதறிஞர் ராஜாஜி, முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியதுமே காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிகுந்த, 'பெருந்தலைவர்' என எல்லாராலும் அழைக்கப்பட்ட காமராஜர் அடுத்த முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியை மேலும் பலப்படுத்தும் வேலையை கவனிப்பதற்காக பாரத பிரதமரின் விருப்பப்படி 1963-ம் ஆண்டு பதவியில் இருந்து விலகினார்.
காங்கிரசுக்கு ஸ்டாப்!
எம்.பக்தவத்சலம் (2.10.1963 முதல் 5.3.1967 வரை) காமராஜர் விலகியதும், எம்.பக்தவத்சலம் பதவியேற்றார். இவரது ஆட்சியில் அரசியல் இடைஞ்சல்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்தன. காங்கிரசுக்கு ஏதிராக புதிய வலுவான கூட்டணி ஏற்பட்டு, தேர்தலில் காங்கிரஸ் தோற்றது. இதனால், 1967-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதியோடு தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு ஒரேடியாக முற்றுப்புள்ளி வைத்து விட்டனர்.
அறிஞர் அண்ணா!
சி.என்.அண்ணாதுரை (6.3.1967 முதல் 3.2.1969 வரை.) அண்ணா என்று அழைக்கப்பட்ட அண்ணாதுரை இரண்டு ஆண்டுகளுக்கு குறைவாகவே முதல்வராக இருந்தார்.
கருணாநிதி!
இன்றைய முதல்வர் கருணாநிதி அவர்களது ஆட்சிக்காலம்
10.2.1969 முதல் 5.1.1971 வரை
15.3.1971 முதல் 31.1.1976 வரை
27.1.1989 முதல் 30.1.1991 வரை
13.5.1996 முதல் 14.5.2001 வரை
13.5.2006 முதல் மே 2011 வரை என பலமுறை முதல்வராக இருந்துள்ளார்.
இதய தெய்வம்!
மக்கள் திலகம், புரட்சி தலைவர், பொன்மனச் செம்மல், எட்டாவது வள்ளல் என, எண்ணற்ற அடைமொழிகளை கொண்டவர் எம்.ஜி.ராமச் சந்திரன். இன்று அவர் மறைந்துவிட்டார் என்று சொன்னால் நம்பாதவர்கள் கூட உண்டு. இன்று அவர் உயிரோடு இருந்திருந்தால் வேறு யாரும் முதல்வராக இருந்திருக்க முடியாது. அந்த அளவுக்கு மக்களின் இதயங்களில் தெய்வமாக இடம் பெற்றிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
இவரது பதவிக் காலம்:
30.6.1977 முதல் 17.2.1980 வரை
9.6.1980 முதல் 15.11.1984 வரை
10.2.1985 முதல் 24.12.1987 வரை
ஜானகி ராமச்சந்திரன்!
7.1.1988 முதல் 30.1.1988 வரை.
ஓ. பன்னீர்ச்செல்வம்!
21.9.2001 முதல் 1.3.2002 வரை.
ஜெ.ஜெயலலிதா!
துணிச்சலும், மக்கள் அக்கறையும் கொண்ட இரும்பு பெண்மணி. இவரது பதவிக்காலம்...
24.6.1991 முதல் 12.5.1996 வரை
14.5.2001 முதல் 21.9.2001 வரை
2.3.2002 முதல் 12.5.2006 வரை
அடுத்து வரும் முதல்வர் யார்... பொறுத்து இருந்து பார்ப்போம்!
என்றென்றும் அன்புடன்,
அங்குராசு
