தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/குட்டீஸ் கார்னர்!

குட்டீஸ் கார்னர்!

குட்டீஸ் கார்னர்!


PUBLISHED ON : ஜூலை 22, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 22, 2011


Follow on Google
அ நிறம் | அளவு

இங்கிலாந்தில் டிவோன் என்ற இடத்தை சேர்ந்த ஒரு விவசாயி, தன் மந்தையில் ஆடுகள் களவு போவதை தடுக்க, மந்தையிலுள்ள 250 ஆடுகளுக்கும் விலங்குகளுக்கு ஆரஞ்சு கலரில்,'டை' அடித்துள்ளார். அதன் பிறகு இவருடைய ஆடுகளில் ஒன்று கூட திருடு போகவில்லை!

சீனாவின் ஸோசிஸ்சூ என்ற இடத்தை சேர்ந்த விவசாயி கிராமபுற குழந்தைகள் பல மைல் தூரம் நடந்து பள்ளிக்கு செல்லுகின்றனர். இந்தக் குழந்தைகள் விரைவாக நடந்து செல்ல உதவும் எலக்ட்ரிக் 'ஷீ' ஒன்றை கண்டுப்பிடித்துள்ளார். இது பேட்டரியில் இயங்குகிறது. இதில் ஹெட் லைட்கள், இண்டிகேட்டர்கள், பிரேக்லைட்டுகள் பொருத்தப் பட்டுள்ளன. இதை அணிபவர்கள் நாள் ஒன்றுக்கு 160 கிலோ மீட்டர் தூரம் வரை நடக்க முடியும். அதாவது, மணிக்கு 18 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும்.

ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் என்ற இடத்தை சேர்ந்த ஒரு பெண்மணி, ஏழாவது மாடி கார் பார்க்கிங்கிலிருந்து காரை வெளியே எடுத்து வரும்போது ஏற்பட்ட விபத்தில் கார் ஏழாவது மாடியிலிருந்து கீழே விழுந்து விட்டது. ஆனால், அப்பெண்மணி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். அதாவது கார் ஏழாவது மாடி அருகே, பக்கத்து வீட்டு சுவரின் குறுக்கே அந்தரத்தில் மாட்டிக் கொண்டது. பிறகு மீட்பு படையினர் அப்பெண்ணை பத்திரமாக காப்பாற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us