PUBLISHED ON : ஆக 05, 2011
கானடாவை சேர்ந்த விக்டர் மிட்டிக் என்ற ஓவியர் துப்பாக்கி குண்டுகள் கொண்டு வரைந்த ஓவியம் மிகவும் புகழ் பெற்றது. இவர் முதலில் கித்தான் துணியில் ஓவியத்தை வரைகிறார். பிறகு கை துப்பாக்கி மற்றும் ஆட்டமெட்டிக் துப்பாக்கியால் துளையிட்டு ஓவியம் வரைகிறார். வண்ணம் பூசப்பட்ட இவரது ஓவியங்கள் தத்துரூபமாக இருக்கிறது. மெர்லின் மன்றோ மற்றும் ஜான் லெனோன் ஆகியோரையும் வரைந்துள்ளார்.
பாரிஸை சேர்ந்த 69 வயது பாட்டி ஒருவர், தொடர்ந்து மூன்று வாரங்கள் பாத்ரூமில் மாட்டிக் கொண்டார். பாத்ரூம் கதவிலிருந்த பூட்டு உடைந்து வெளியே வரமுடியாமல் மாட்டிக் கொண்டார். பாட்டி தன்னை காப்பாற்றுபடி பயங்கரமாக கதவை தட்டி சப்தம் எழுப்பினார். ஆனால், பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள், அப்பார்ட் மென்டில் எங்கேயோ கட்டிட வேலை நடக்கிறது என, தவறாக நினைத்துவிட்டனர். பிறகு, பாட்டி வீட்டு வாசலில் கிடந்த, 'தபால்' எடுக்கப்படாமல் இருந்ததை கவனித்த பக்கத்து வீட்டுக்காரர், போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து பாட்டியை காப்பாற்றினர்.
