PUBLISHED ON : ஜன 27, 2012

அ நிறம் | அளவு
உருளைக்கிழங்கு வாங்கும் போது அது கெட்டியாக இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். வெட்டுப்பட்டது, முளைவிட்டது, புள்ளி விழுந்தது, பச்சை நிறமாக இருப்பதை வாங்க வேண்டாம். உருளைக்கிழங்குகளை வேகவிடும்போது கூடுமானவரை ஒரே அளவில் உள்ள கிழங்குகளை போட்டால், ஒன்று போல் வேகும். கிழங்கை தோலுரித்து அப்படியே வைத்திருந்தால் கருநிறம் படிந்துவிடும். உப்பு கரைந்த குளிர்நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.
