தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/முட்டுக்கட்டை!

முட்டுக்கட்டை!

முட்டுக்கட்டை!


PUBLISHED ON : செப் 06, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 06, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார், சீர்காட்சி இடைநிலைப்பள்ளியில், 1974ல், 8ம் வகுப்பு படித்தேன்.

இறுதித் தேர்வு எழுத, சற்று துாரத்தில் உள்ள வெள்ளாளன்விளை கிராம பள்ளிக்கு செல்ல வேண்டும். போக்குவரத்து வசதி கிடையாது. இந்த சிரமத்தால், 7ம் வகுப்புடன், அந்த ஊரில், மாணவியர் படிப்பை நிறுத்தி விடுவர்.

இதை தடுக்க, எங்கள் தலைமை ஆசிரியர் தேவாரம் முயற்சி எடுத்தார். அவரது வீடு வெள்ளாளன்விளையில், பள்ளி அருகிலேயே இருந்தது.

அந்த ஆண்டு, ஒரு மாணவி உட்பட, மூன்று பேர் தேர்வு எழுத தயாராக இருந்தோம்.

தேர்வு துவங்கும் முன், வீட்டுக்கு அழைத்து சென்ற தலைமை ஆசிரியர், மாணவர்களை அவரது அறையிலும், மாணவியை, அவரது மனைவி அறையிலும் தங்க வைத்தார்.

அதிகாலை, 4:00 மணிக்கே எழுப்பி படிக்க வைத்ததுடன், மூன்று வேளையும் உணவு தந்து கவனித்துக் கொண்டார். அவரது அரவணைப்பால், நன்கு தேர்வு எழுதி, வென்றோம்; வாழ்க்கையில் உயர்ந்தோம்.

இப்போது என் வயது, 59. எந்த பிரதிபலனும் எதிர்பாராமல், தலைமை ஆசிரியரும், அவரது மனைவியும் செய்த உதவியை, நன்றியுடன் மனதில் கொண்டுள்ளேன்.

திருச்செந்துார் பேருந்து நிலையத்தில், கடந்த ஆண்டு அவரை சந்தித்தேன். உடனே, பாதம் தொட்டு வணங்கினேன்.

- எல்.சந்திரசேகரன், சென்னை.

தொடர்புக்கு: 93830 06408


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us