தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கனிவும் கண்டிப்பும்!

கனிவும் கண்டிப்பும்!

கனிவும் கண்டிப்பும்!


PUBLISHED ON : செப் 06, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 06, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, காரனேசன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1999ல், 7ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு...

என் வீடு புறநகர் பகுதியில் இருந்தது; அங்கு, குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பேருந்து வசதி உண்டு.

பள்ளியில், மாலை சிறப்பு வகுப்புக்கள் நடக்கும். அதை முடித்து, பேருந்தை பிடிக்க முடியாமல் அவதிப்படுவேன். இதை அறிந்த என் அறிவியல் ஆசிரியை வல்லிக்கொடி, வகுப்பு முடியாவிட்டாலும், பேருந்து வரும் நேரத்துக்கு என்னை கிளம்ப சொல்வார். நான் செல்வதை பிற மாணவியரிடம் உறுதி செய்து கொள்வார்.

என், 10ம் வகுப்பில் அவரே வகுப்பாசிரியை. அவர் அறிவுரைப்படி, சைக்கிள் வாங்கி கொடுத்தனர் பெற்றோர். அதில் தான், பள்ளி சென்று வந்தேன்.

அப்போதும் தாமதம் ஏற்பட்டால், 'தனியாக வெகு துாரம் செல்ல வேண்டுமே... உடனே கிளம்பு...' என்று வலியுறுத்தி அனுப்பி வைப்பார்.

எனக்கு, 32 வயதாகிறது; திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி சிந்திக்கும் போதெல்லாம், கனிவும், கண்டிப்பும் நிறைந்த அந்த அறிவியல் ஆசிரியை தான் நினைவுக்கு வருகிறார். அவரை போற்றுகிறேன்.

- மு.முனீஸ்மாலா, விருதுநகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us