தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தோல்வியை தோற்கடி!

தோல்வியை தோற்கடி!

தோல்வியை தோற்கடி!


PUBLISHED ON : ஆக 15, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 15, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர் மாவட்டம், குல்லுார்சந்தை, எஸ்.வி.வி.உயர்நிலைப் பள்ளியில், 1979ல், 10ம் வகுப்பு படித்தபோது, நடந்த சம்பவம்...

பள்ளியில் இரவு சிறப்பு வகுப்புகளை நடத்துவார் வகுப்பு ஆசிரியர் ராமச்சந்திரன். அவர் மாற்று திறனாளி. நம்பிக்கை தரும் விதமாக செயல்படுவார். உடன் படித்த நண்பன் கண்ணன், சிறப்பு வகுப்பின்போது, அடிக்கடி வெளியே செல்வான்.

அப்போதெல்லாம் மின்தடை ஏற்படும். அவன் திரும்பயதும், மின்சாரம் வரும். இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கும். யாரும் இதை, பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அன்றும் மின் தடை ஏற்பட்டது; வெகுநேரமாகியும் அவன் திரும்பவில்லை. தற்செயலாக வெளியே சென்ற ஆசிரியர், சுவிட்ச் போர்டு அருகே மயங்கி கிடந்தவனைக் கண்டு அதிர்ந்தார். அவசரமாக முதலுதவி செய்து தெளியவைத்தார்.

திட்டமிட்டு மின்தடை ஏற்படுத்தியது அப்போதுதான் தெரிந்தது. இதை அறிந்தவர், 'கண்ணா... சக நண்பர்கள் படிப்பதற்கு தடங்கல் ஏற்படுத்திய உனக்கு, நல்ல பாடம் கற்று தந்து விட்டது மின்சாரம். வாழ்க்கைப் பாதையில் நல்ல சிந்தனையுடன் நடந்தால், தோல்வியை தோற்கடிப்பாய்...' என அறிவுரைத்தார்.

தற்போது, என் வயது, 56; என் நண்பனை பார்க்கும் போதெல்லாம், 'வாடா கரண்ட் கண்ணா...' என்று கிண்டல் செய்வேன். அந்தநாள் நினைவு, தென்றலாய் நெஞ்சை வருடும். அந்த ஆசிரியரின் அறிவுரை வாழ்க்கையை முன்னேற்றும் பாலமாக உள்ளது.

- எஸ்.ராஜமோகன், விருதுநகர்.

தொடர்புக்கு: 82202 12189

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us