PUBLISHED ON : அக் 21, 2023

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
முளை கட்டிய வெந்தயம் - 1 கப்புளி கரைசல் - 2
கப்நல்லெண்ணெய் - 2 கப்மிளகாய் துாள் - அரை தேக்கரண்டிமஞ்சள் துாள்,
வெல்லப் பொடி, பெருங்காய பொடி - சிறிதளவுகடுகு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில், நல்லெண்ணெய் காய்ந்ததும், கடுகு தாளித்து, முளை கட்டிய வெந்தயத்தை போட்டு கிளறவும். நன்கு வெந்ததும் புளி கரைசல், மிளகாய் துாள், உப்பு, மஞ்சள் துாள் சேர்க்கவும்.
இந்த கலவை கெட்டியானதும், வெல்லப் பொடி, பெருங்காயப் பொடி சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும். புதுமையான, 'வெந்தய ஊறுகாய்' தயார்.
பக்க உணவாக பயன்படுத்தலாம். அனைத்து வயதினரும் விரும்புவர்.
- பி.மஹதி, திருச்சி.
தொடர்புக்கு: 90432 82401
