தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளமையில் கல் எறியாதே...

இளமையில் கல் எறியாதே...

இளமையில் கல் எறியாதே...


PUBLISHED ON : மே 31, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 31, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை மாவட்டம், தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லுாரியில், 1955ல் படித்தேன். அப்போது, நடந்த சம்பவம்!

நண்பர்களுடன், கல்லுாரிக்கு வெளியே, நின்று கொண்டிருப்பேன். அந்த வழியாக செல்லும் பெண்களை, சிறு கற்களை வீசி கிண்டல் செய்வோம்; அவர்கள் முறைத்து, திட்டுவதை ரசிப்போம்.

அன்று செய்முறை தேர்வு. வழக்கம் போல், கல் வீசிக்கொண்டிருந்தோம். புதிதாக சில பெண்கள், கல்லுாரிக்கு வந்தனர்; அவர்கள் மீதும் வீசினோம். சுடிதார் அணிந்த ஒரு பெண் மீது, கல்லடி படவில்லை. எனவே, மீண்டும் குறி பார்த்து வீசினேன். அவர் திரும்பி பார்த்தபடி சென்று விட்டார்.

தேர்வு முடிந்ததும், 'வைவா' வுக்கு, ஒரு வகுப்பறைக்குள், தனித்தனியாக அழைத்தனர். அங்கு சென்ற யாரும் திரும்பவில்லை; நான் உள்ளே போனதும் துாக்கி வாரிப் போட்டது; அதிர்ந்து நின்றேன்.

நான், கல் எறிந்த பெண் தான், தேர்வு அதிகாரி. அவர், 'என் மீது கல் எறிந்தவர் யார்...' என, கேட்டார். அனைவரும் மவுனமாக நின்றனர். நான், 'தெரியாமல் செய்து விட்டேன்; மன்னித்து விடுங்கள்...' என்றேன்.

அவர், என் விடைத்தாளை பார்த்தபடி, 'நல்லா படிக்கிறவன் இப்படி செய்யலாமா... இளமையில் கல், என்பது கற்பதற்கு; கல் எறிவதற்கு அல்ல...' என்று அறிவுரை கூறி, உரிய மதிப்பெண் வழங்கினார்.

அன்று முதல், அது போன்ற செயல்களை விட்டேன். இன்றும், நன்றியுடன் அந்த தேர்வு அதிகாரியை நினைக்கிறேன்.

- ரா.சுரேஷ்பாபு, மதுரை.

தொடர்புக்கு: 85258 53977


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us