தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நண்பன் செய்த உதவி!

நண்பன் செய்த உதவி!

நண்பன் செய்த உதவி!


PUBLISHED ON : மே 31, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 31, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை மாவட்டம், செக்ககுடி, புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளியில், 1992ல், 10ம் வகுப்பு படித்தேன். உடன் படித்த நண்பன், அலெக்ஸ் ஏழை குடும்பத்தை சேர்ந்தவன். அவ்வப்போது, புது துணியும், பணமும் கொடுத்து உதவியிருக்கிறேன். ஆண்டு இறுதியில், பள்ளி சுற்றுலாவுக்கு, கட்டணம் செலுத்தி அழைத்து சென்றேன்.

அவனால், மேற்படிப்புக்கு செல்ல முடியவில்லை. பல இடங்களில் வேலை செய்தான்; அந்த அனுபவத்தால், சென்னையில் ஒரு நிறுவனத்தில் சேர்ந்தான். திறமையால் உயர்ந்து, குடும்பத்தை காக்கும் நிலையை அடைந்தான்.

நான், கல்லுாரியில் சேர்ந்து, பட்டம் வாங்கினேன். வேலை தேடி அலைந்த போது, கருணையுடன் உதவினான். அவன் வீட்டிலேயே தங்க வைத்து, வேலையிலும் சேர்த்து விட்டான்.

அந்த வேலை கற்றுத்தந்த அனுபவத்தில், தேவகோட்டை, பேருந்து நிலையத்தில், சொந்த கடை நடத்தி வருகிறேன். தற்போது என் வயது; 42. அவன் செய்த உதவியை குடும்பத்தாரிடம் சொல்லி மகிழ்கிறேன்.

நண்பன் செய்த உதவியால் பெருமைப் படுகிறேன்!

- சு.பிரபாகர், சிவகங்கை.

தொடர்புக்கு: 91594 07208


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us