தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/முடிந்தது!

முடிந்தது!

முடிந்தது!


PUBLISHED ON : செப் 06, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 06, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒருசமயம் நெப்போலியன் தனது தளபதிகளை விருந்திற்கு அழைத்திருந்தார். விருந்திற்கான நேரம் ஆன பின்னர் கூட அவர்கள் யாரும் அந்த விருந்திற்கு வந்து சேரவில்லை. அவர் சொல்லியிருந்த சரியான விருந்து நேரத்திற்கு தனியாகவே அமர்ந்து உணவை உண்ண ஆரம்பித்துவிட்டார் நெப்போலியன்.

அவர் உணவு உண்டு முடிக்கும் வேளையில், தளபதிகள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர்.

உடனே நெப்போலியன் விருந்து மேஜையை விட்டு எழுந்து, 'எனது அருமை தளபதிகளே! விருந்து நேரம் முடிந்துவிட்டது. இப்போது வேலை செய்யும் நேரம் தொடங்கி விட்டது. வாருங்கள், ஒரு நிமிடமும் வீணாக்காமல், நாம் நம் வேலையை செய்யத் தொடங்குவோம்' என்றார்.

இதைக்கேட்டு பதில் அளிக்க முடியாத தளபதிகள், வேறு வழியின்றி பசியுடன் வெறும் வயிற்றைத் தடவிக் கொண்டே தங்கள் வேலையைத் தொடங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us