தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அலர்ஜி அரக்கன்!

அலர்ஜி அரக்கன்!

அலர்ஜி அரக்கன்!


PUBLISHED ON : செப் 06, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 06, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* எல்லாருக்கும் 'அலர்ஜி' என்பது இருக்கும். சாப்பிடும் உணவு, உடுத்தும் உடை, புழங்கும் பொருட் கள் என்று நமக்கு ஏதாவது ஒரு விதத்தில் அலர்ஜி இருக்கும்.

* 'அலர்ஜி' என்பது விசித்திரமான வியாதி என்கின்றனர் மருத்துவ உலகில். மைக்ரோப், பாக்டீரியா, வைரஸ் போன்ற எந்தக் கிருமி அரக் கனுக்கும், அலர்ஜியோடு தொடர்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வியாதிக்கு அலர்ஜி என்று பெயரை சூட்டியவர் டாக்டர் க்ளமென்ஸ் ப்ரெய்ஹர் வான் பிர்க்யூட் என்பவர்.

* நம் உடலுக்குள் தற்காப்புக்காக இம்யூன் சிஸ்டம் உள்ளது. சிலருக்கு இந்த சிஸ்டம் தடுமாறும் போது உடலுக்குள் நுழையும் கிருமிகளை சரியாக கவனிக்காமல் ரியாக்ட் செய்து விடுகிறது. இப்படி ரியாக்ட் செய்யப் படுவதுதான் 'அலர்ஜி' எனப்படுகிறது.

* 'அலர்ஜி' என்றால் உடனே ஜல தோஷம், தும்மல், மூச்சுத் திணறல், சொறி, கொப்பளங்கள் இதில் ஏதாவது ஒன்று நமது உடலில் வந்து விடுகிறது. நாள் முழு வதும் நாம் எத்தனையோ விஷயங்களை முகர்ந்து கொண்டும் விழுங்கிக் கொண்டும் இருப்பதால் அலர்ஜிக்கு காரணம் எது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us