தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/விடா முயற்சி!

விடா முயற்சி!

விடா முயற்சி!


PUBLISHED ON : ஜூலை 23, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 23, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை, புனித ஜோசப் மெட்ரிக்குலேஷன் பள்ளியில், 1985ல், 5ம் வகுப்பு படித்தபோது, வகுப்பு ஆசிரியையாக இருந்தார் பிச்சம்மாள். பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் பொறுப்பையும் வகித்தார். அவற்றில் பங்கேற்க மாணவ, மாணவியருக்கு பயிற்சி கொடுப்பார்.

அன்று, 'வானம் பொழிகிறது; பூமி விளைகிறது...' என்ற வீரபாண்டிய கட்டபொம்மன் சினிமா வசனத்தை மனப்பாடம் செய்ய சொன்னார். முறைப்படி அதை பேசவும் பயிற்சி தந்தார். தவறாக உச்சரித்தால் தண்டனை தந்து மீண்டும் பேச வைத்தார்.

நடுங்கிக்கொண்டிருந்த என்னிடம், 'பயந்தால் மேடையில் ஜெயிக்க முடியாது...' என அறிவுரைத்தபடி, கிள்ளினார். வலியால் துடித்து, விடாமல் முயற்சி செய்தேன்.

மேடையில் இயல்பாக பேசும் திறனைப் பெற்றேன். அது, பட்டிமன்ற பேச்சாளராக உயர்த்தியது. நட்சத்திர பேச்சாளர் என்ற அந்தஸ்து பெற்றுள்ளேன். பேச்சு திறனால், ஏழு நாடுகளில் பயணம் செய்ய வாய்ப்பு பெற்றேன். தொலைகாட்சி சிறப்பு நிகழ்ச்சிகளில் பேசி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தேன்.

எனக்கு, 47 வயதாகிறது; எம்.காம்., பட்டதாரியாக உள்ளேன். மேடைப்பேச்சு, என் வாழ்க்கையை உயர்த்த உதவுகிறது. அதற்கு தக்க பயிற்சி அளித்த அந்த ஆசிரியைக்கு நன்றியை சமர்ப்பிக்கிறேன்.

- எ.சசிகலா, விருதுநகர்.

தொடர்புக்கு: 95666 91746


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us