
உலகில், 310க்கு அதிக வகை புறாக்கள் உள்ளன. வெப்ப மண்டல பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. பாலைவனம் மற்றும் குளிர் பிரதேசங்களை தவிர்த்து விடும்.
புறாக்கள்...
* காட்டிலும், வீட்டிலும், புல்வெளியிலும் வசிக்கும்
* மிகப் பெரியது நான்கு கிலோவும், சிறியது, 22 கிராம் எடையிலும் இருக்கும்
* இதுவரை, 10 இனங்கள் அழிந்து விட்டன; மேலும், 59 வகை இனங்கள் அழியும் நிலையில் உள்ளன
* ஐரோப்பிய மத சடங்குகளில் புறாவை பலிக்கொடுக்கும் வழக்கம் உள்ளது
* இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் புறாக்களை பலி கொடுக்கின்றனர்
* புறாவுக்கு உணவளித்ததால், புண்ணியம் என்ற நம்பிக்கை புத்த, சமண, இந்து சமயங்களில் உள்ளது
* இரண்டாம் உலகப் போரில், மிகச்சிறந்த சேவை செய்ததற்காக, 32 புறாக்களுக்கு, 'வீரடிக்கின்' என்ற பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
புத்திசாலியான பறவை இது. வளர்ப்பவரை பிரிந்தாலும் பல மாதங்களுக்கு பின்னும் அடையாளம் காணும் திறன் பெற்றுள்ளது. ஆங்கில எழுத்துகளை புரிந்து கொள்ளும் புத்திசாலிதனமும் உண்டு. இதன் ஆயுள் காலம், ஆறு ஆண்டுகள்.
இந்திய பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, 'பறக்கட்டும் அமைதி புறா...' என கூறி, மக்கள் மனதில் சமத்துவத்தை வளர்க்க முயன்றார்.
- ராஜி ராதா