தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/உலர் பழ பர்பி!

உலர் பழ பர்பி!

உலர் பழ பர்பி!


PUBLISHED ON : ஜூலை 25, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 25, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

பேரீச்சம் பழம் - 1 கப்

உலர் திராட்சை - 50 கிராம்

முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்பு - தலா 50 கிராம்

நெய் - 2 தேக்கரண்டி

வெள்ளை எள், தேங்காய் துருவல் - தலா 2 மேஜைக்கரண்டி

ஏலக்காய் பொடி - சிறிதளவு.

செய்முறை:

முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்புகளை பொடியாக்கவும்; விதை நீக்கிய பேரீச்சம் பழம், உலர் திராட்சையை பொடியாக நறுக்கி மசிக்கவும்.

வாணலியில் நெய் ஊற்றி, வெள்ளை எள், தேங்காய் துருவலை சிவக்க வறுக்கவும். அதனுடன் பொடித்த பருப்பு, மசித்த பழங்களை சேர்த்து, ஐந்து நிமிடங்கள் வதக்கவும். பின், ஏலப்பொடி துாவி இறக்கவும்.

நெய் தடவிய தட்டில் கொட்டி, துண்டுகளாக்கவும். சத்துக்கள் நிறைந்த, 'உலர்பழ பர்பி' தயார். சிறுவர், சிறுமியர் விரும்பி சுவைப்பர்.

- சுபஸ்ரீ, புனே.

தொடர்புக்கு: 098400 35425


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us