தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/டியூட்டி கேர்ள்!

டியூட்டி கேர்ள்!

டியூட்டி கேர்ள்!


PUBLISHED ON : அக் 01, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 01, 2022


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார், புனித பிலோமினாள் நடுநிலைப் பள்ளியில், 1977ல், 8ம் வகுப்பு படித்தேன். வகுப்பு ஆசிரியை லுார்து மேரி, மிகவும் பொறுமையானவர். அன்பு, அனுசரணையுடன் புரியும் வகையில், விளக்கமாக பாடம் நடத்துவார்.

வகுப்பறையை பெருக்கி, சுத்தமாக வைத்துக்கொள்ள பயிற்சி தந்து தவறாது செய்ய அறிவுறுத்தினார். குடிநீர் பிடித்து வைப்பதையும் முறைப்படுத்தினார். இந்த பணிகளை நிறைவேற்ற மாணவியரை நியமிப்பார். வாரத்துக்கு இருவர் அந்த பணிகளை செய்ய வேண்டும்.

அன்று வகுப்பறையை பெருக்க வேண்டிய மாணவியர் வரவில்லை; இதைக் கண்ட ஆசிரியை, 'இன்றைக்கு யார் முறை... ஏன் சுத்தம் செய்யாமல் இருக்குறீங்க...' என விசாரித்தார். பெருக்க வேண்டியவர்கள் விடுப்பில் உள்ளதை கூறினோம்.

உடனே, 'யாராவது சுத்தம் செய்யுங்கள்...' என்றார். நான் வகுப்பை பெருக்கி, குடிதண்ணீர் பிடித்து வைத்தேன். அன்று முதல், யார் வந்தாலும், வரா விட்டாலும், பெருக்கி சுத்தம் செய்வதை வழக்கமாக்கி கொண்டேன்.

கல்வி ஆண்டின் இறுதியில், 'ஸ்கூல் டே' கொண்டாட்டம் நடந்தது. ஆடல், பாடல், நாடகத்துடன், சிறிய விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வகுப்பறையில் முறையாக பணி செய்திருந்த எனக்கு, 'டியூட்டி கேர்ள்' என பட்டம் சூட்டி, 'ஜாமெண்ரி பாக்ஸ்' ஒன்றை பரிசாக தந்தார் ஆசிரியை. மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

தற்போது, என் வயது, 51; பள்ளியில் அன்று நடந்த நிகழ்வை இன்றும் மறக்க முடியவில்லை.

- ஆர்.சரோஜா, சென்னை.

தொடர்புக்கு: 85310 48931

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us