தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/குள்ளனும் நொண்டி குதிரையும்! (2)

குள்ளனும் நொண்டி குதிரையும்! (2)

குள்ளனும் நொண்டி குதிரையும்! (2)


PUBLISHED ON : ஏப் 08, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 08, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''நான் ஒரு குடும்பதோடு அங்கு (எந்த ஊர் என்று நினைவில்லை) நடக்கும் திருவிழாவிற்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு அரசரின் அரண்மனையைத் தாண்டிச் செல்ல வேண்டி இருந்தது. அரண்மனை வாயிலில் ஒரு 'லம்பாடி'கள் கூட்டம் சில வித்தைகளை செய்து கொண்டிருந்தனர். அரசர் உடனே, அவர்களை அரண்மனைக்குள் அழைத்து வித்தைகளை செய்யும்படி பணித்தார்.

''அக்கூட்டம் அரண்மனைக்குள் நுழைய, நானும் அவர்களை பின் தொடர்ந்தேன். அந்த கூட்டம் வித்தைகள் செய்து முடித்த பின்னர், அந்த அரசர் என்னை கூப்பிட்டு, 'நீ யார்? எங்கிருந்து வருகிறாய்?' என்றார். நான் ஊமையாதலால் அவர் கேள்விகளுக்கு என்னால் பதில் அளிக்க முடியவில்லை. மேலும், நான் யார் என்பது எனக்குத் தெரியவே தெரியாது. அந்த 'லம்பாடி'கூட்டத்தினரிடம் என்னைப்பற்றி விசாரித்தார் அரசர். அவர்களும் என்னை இப்போதுதான் முதல் முறையாகப் பார்ப்பதாகவும், தங்கள் கூட்டத்திற்கும் எனக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்று கூறிவிட்டனர்.

''என்னை அருகில் அழைத்த அரசர், 'உன்னை என் அரண்மனையில் வைத்துக் கொள்கிறேன். நீ மாதம் ஒருமுறை நான் குறிப்பிடும் இடத்திலுள்ள குடிசைக்கு சில சாப்பாட்டு பொருள்கள் எடுத்துச் செல்லவேண்டும்... அவ்வளவுதான் உன்வேலை!' என்றார். நானும் ஒப்புக்கொண்டேன்,''

'' ஓ! அப்படியானால், அங்கே நீ பார்த்த அந்த இளவரசியிடம் உனக்கு காதல்... அப்படித்தானே?'' என்று கேட்டு கண் சிமிட்டியது தேவதை.

அட! குள்ளன் முகத்தில்தான் என்ன ஒரு வெட்கம்!

''வெட்கப்பட இதில் ஒன்றுமில்லை. நீ நிஜமாகவே அந்த இளவரசியை காதலிக்கிறாய் என்றால், அவளை பீடித்துள்ள அந்த வசியமருந்திலிருந்து விடுவிடுத்து விட தயாரா?'' என்றது தேவதை.

''என் உயிரை கொடுத்தாவது இளவரசியை காப்பாற்றுவேன்,''என்றான்.

''வார்த்தை மாற மாட்டாயே?''

''சத்தியமாக மாறமாட்டேன்.''

''சரி. நான் சொல்வதை கவனமாக கேள். இளவரசி லிசாவின் தந்தைதான் இந்நாட்டை ஆளவேண்டியவர். ஆயினும் அவரை மிக நயவஞ்சமாக கொன்று விட்டான். தன் தந்தையை கொன்றவன் இவன்தான் என்று லிசாவிற்கு தெரியுமாதலால் அவளையும் கொன்று விட நினைக்கையில், இவனுடைய கூட்டாளியான ஒரு மந்திரவாதிப்பெண், 'ஊஹீம் வேண்டாம்... நீ லிசாவைக் கொன்றால் மறுநிமிடமே, உன் உயிர்போய்விடும்' என்றாள்.

'அப்படியானால், என்ன செய்வது?' என்று அந்த அயோக்யன் கேட்க,'கவலைப்படாதே, அவளை வசிய மருந்து சக்தியால் முழுமையாக கட்டுப்படுத்தி விடுகிறேன். அவளை ஊருக்குள் மிக தூரத்தில் இருக்கும் ஒரு தனிமையான இடத்தில் ஒரு குடிசை போட்டு அதில் தங்க வைத்து விடலாம். என் வசிய மருந்து சக்தியால் அவள் முழுமையாக தன்னை மறந்து விடுவாள். தான் யாரென்றே அவளுக்கு தெரியாது. மேலும், இந்த மருந்தின் சக்தியால் அந்த குடிசையிலிருந்து தப்பி செல்லும் எண்ணமே அவளுக்கு எழவே எழாது. எதற்கும் அவள் துணைக்கு ஒரு ஊமை கிழவியை ஏற்பாடு செய்து விடுகிறேன்'என்று சொல்லி விட்டாள்.

''அவளின் அந்த வசிய மருந்தின் சக்தியால்தான் அந்த குடிசையைச் சுற்றி உள்ள மிகப்பெரிய திடலும் உயிரற்று போயிற்று... இவர்களுக்கு சாப்பாடு கொண்டு போவதற்கு தேவை ஒரு ஊமை. இவர்கள், யார், ஏன் இப்படி இந்த இடத்தில் வசிக்கின்றனர் என்பதையெல்லாம் பற்றிக் கவலைப்படாத ஆளாக இருக்கவேண்டும் என்பதால்தான் உன்னை அரசன் வேலைக்கு அமர்த்தினார்.''என்றது அந்த தேவதை.

''தேவதையே! இவ்வளவு விபரங்கள் தெரிந்த உனக்கு, நான் யார்? எங்கிருந்து வந்திருக்கிறேன் என்ற விபரம் தெரியுமல்லவா? தயவு செய்து சொல்லேன்.''

''உம்! சிறிது நாட்களில் உனக்கே புரியும். உனக்கு பேசும் சக்தியை கொடுத்துவிட்டேன். நீ மனப்பூர்வமாக இந்த இளவரசியை வசிய மருந்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பதில் முனைந்தால், பின்னர் எல்லா விபரமும் உனக்கு புரிய வைப்பேன்.''

''நான் நிச்சயமாக இளவரசியை விடுவிப்பேன்.''

''அது அத்தனை சுலபமல்ல... நீ மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டுமே... கொடுப்பாயா?''

''சத்தியமாக கொடுப்பேன்.''

''வசிய மருந்திலிருந்த இளவரசியை விடுவிக்க தேவை சில ஆயுதங்கள்.'' என்றாள்.

''அந்த ஆயுதங்கள் எங்கே இருக்கின்றன?''

அந்த ஆயுதம் மிகவும் பளபளப்பான அடர்ந்த நீலநிற ஈட்டி வெள்ளிக் கைப்பிடியில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே ஒரு பெரிய வெள்ளி 'ஷீல்ட்' வைக்கப்பட்டுள்ளது. இவை ' மிஸ்டிக் லேக்' என்ற இடத்தில் தான் உள்ளது. நீ செய்ய வேண்டியதெல்லாம் அந்த ஈட்டியை உருவி அந்த வெள்ளி ஷீல்ட்டின் மேல் மூன்றுமுறை தட்ட வேண்டும். அப்புறம் அந்த ஷீல்ட்டை திருப்பி வைத்துக்கொண்டு அதன் மறுபுறம் மூன்றுமுறை தட்ட வேண்டும். உடனே அந்த கணத்திலேயே வசிய மருந்திற்குட்பட்டு வெறிச்சோடிக்கிடக்கும் அந்த திடலும் உயிர்பெற்று பச்சை பசேலென்று ரத்ன கம்பளம் விரித்தாற்போல் எங்கும் இளம் மரங்களும், பூத்துக்குலுங்கும் செடி களும், பழங்களும் கண் இமைக்கும் நேரத்தில் அந்த இடம் தேவலோகமாகிவிடும். இளவரசி லிசாவும் நல்ல நிலைமைக்கு திரும்பி விடுவாள்,'' என்றது தேவதை.

''ஓ! அப்படியானால் நான் இப்போதே புறப்படுகிறேன்,''என்றான் குள்ளன்.

''சரி. நீ புறப்படு... ஆனால், இதற்கெல்லாம் உரிய கூலியை நீ கொடுத்தாக வேண்டும்... கொடுப்பாயா?''

''நிச்சயமாக கொடுப்பேன்!''

''நீ உடனே புறப்படு. நீ உன் குதிரை மேல் ஏறிக்கொள். அதுவே தன்னிச்சையாக உன்னை அந்த'மிஸ்டிக் லேக்' எதிர் கரையிலுள்ள தீவின் கரைக்கு கொண்டு போகும். நீ இந்த தீவை சுற்றியுள்ள கடலை கடந்து தான், 'மிஸ்டிக் லேக்' ஐ அடைய முடியும்.

''நீ உன் குதிரையின் மேல் எறித்தான் இந்த கடலை கடக்க முடியும். அக்கடலில் மிககொடிய விஷ ஜந்துக்கள் இரவு, பகலாக மிதந்து கொண்டே இருக்கும். நீ அவைகளுக்கு கொடுக்க வேண்டிய கூலியை கொடுத்துவிட்டுத்தான் கடக்க வேண்டும். இல்லையெனில் உன்னையும் உன் குதிரையையும் கடித்துக் குதறி துண்டு துண்டாக்கிவிடும்.''

''விஷ ஜந்துக்களுக்குக் கொடுக்க வேண்டிய கப்பத்தை செலுத்திய பின், நீ 'மிஸ்டிக் லேக்' ஐ அடைவாய். உடனே அந்த குளத்தில் இறங்கிவிடாதே, அக்குளத்தின் தண்ணீர் முற்றிலும் இரத்த சிவப்பாக மாறிய பின்னரே, நீ இறங்க வேண்டும். நீ அவசரப்பட்டு முதலில் இறங்கிவிட்டால் அப்புறம் நீயோ உன் குதிரையோ உயிரோடு இருக்கமாட்டீர்கள்.

''சரி நான் என்ன கப்பம் செலுத்த வேண்டும்?''

''அந்த நேரம் வரும்போது உனக்கு தெரிவிக்கப்படும்... சரி நீ புறப்படு,'' என்றது தேவதை.

தேவதையின் அறிவுரைப்படி குதிரையுடன் புறப்பட்ட குள்ளன், மலைமீது ஏறத் துவங்கினான். மலையின் உயரம் ஏற,ஏற நீண்டுகொண்டே போயிற்று எனலாம். அவ்வளவு உயரமான மலை அது. மூச்சுமுட்டி திணறினர் இருவரும். மலை உச்சியை அடைந்ததும் கீழே பார்த்தவனுக்கு தலை சுற்றியது.

கீழே உள்ள அதள பாதாளத்தில் அந்த 'மிஸ்டிக் லேக்' அதனை சுற்றியுள்ள தீவையும் கண்டான். வேறு வழியின்றி கீழே இறங்கத் துவங்கியதும், சூரியன் மறைந்து இருள் கவ்வத்துவங்கியது. ஆகாயத்தில் கண் சிமிட்டிக் கொண்டிருக்கும் ஒரே நட்சத்திரம்; அங்கே அடர்ந்திருக்கும் மயான அமைதி. அவனுள் ஒருவித பயத்தைக் கிளம்ப, ''குள்ள ஏஜமானரே இனி என்னால் ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியாது. என் சக்திக்கு மீறி மலை ஏறி விட்டேன்,'' என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டு பொத்தென்று கீழே விழுந்து விட்டது குதிரை. குள்ளனுக்கும் உடல்வலி... உள்ளத்தில் பயம் சேர, அப்படியே தன் குதிரையின் அருகில் படுத்து உறங்கிவிட்டான்.

(- 2தொடரும்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us