
முதலைகள், அதிக பட்சம், 17 அடி நீளம் வரை வளரும்; அவற்றின், சராசரி நீளமே, ஒன்பது அடி. ஆனால், வடக்கு ஆப்பிரிக்க கடற்கரையோரம் காணப்படும், ஒருவகை முதலை, அதிக பட்சம், ஐந்து அடி நீளம் தான் வளரும். இவற்றுக்கு, 'குள்ள முதலைகள்' என்றே பெயர்.
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் முதலை இனங்கள் எல்லாம், மனிதர்களை தாக்க கூடியவை. ஆனால் குள்ள முதலைகள், மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை.
அவற்றை சீண்ட நினைத்தால் மட்டுமே, மனிதர்களை தாக்க முற்படும்; முட்டைகளை அடை காக்கும் போது, சில மாதங்கள் வரை இந்த ரக முதலை இரை தின்னுவதில்லை.
டைனோசர் என்ற உயிரினம் வாழ்ந்த காலத்தில் இருந்த முதலை, அதிக பட்சம், 50 அடி நீளம் வரை இருந்துள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர்; இது, டைனோசரை கூட வேட்டையாடும் ஆற்றல் பெற்றிருந்தது.
சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில், வடநெம்மேலி என்ற இடத்தில் முதலைப் பண்ணை உள்ளது. உலகில் உள்ள அனைத்து வகை முதலைகளும் இங்கு உள்ளன. திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார் அணை பகுதியிலும் முதலைப் பண்ணை உள்ளது.

