PUBLISHED ON : ஆக 24, 2018

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
சோயா உருண்டை- 1 கப்
சர்க்கரை - 1 கப்
பைனாப்பிள் எசன்ஸ் - 1 சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
ஏலக்காய் துாள் - 2 டீஸ்பூன்
செய்முறை:
சோயா உருண்டையை, கொதிக்கும் நீரில், ஒரு நிமிடம் போட்டு, பிழிந்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, சோயா உருண்டைகளை, பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில், சர்க்கரையை போட்டு, அது மூழ்கும் வரை, தண்ணீர் ஊற்றி, பைனாப்பிள் எசன்ஸ், ஏலக்காய் துாள் போட்டு, நன்றாக கொதிக்க விடவும். 10 நிமிடம் கொதித்த பின், பொரித்து வைத்துள்ள, சோயா உருண்டைகளை, அதில் போட்டு நன்கு ஊறவிடவும். சத்தான, ஈசி ஜாமூன் தயார்!
மிகவும் சுவையாக இருக்கும்; குழந்தைகள் விரும்பி உண்பர்.
- கே.மேனகா, சென்னை.
