தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கல்வி விதைத்த மனம்!

கல்வி விதைத்த மனம்!

கல்வி விதைத்த மனம்!


PUBLISHED ON : செப் 12, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 12, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர் மாவட்டம், கட்டயத்தேவன்பட்டி, துவக்கப்பள்ளியில், 1958ல், 5ம் வகுப்பு படித்தேன்.

எங்கள் வகுப்பு ஆசிரியர் செவத்தியான். காலையில் தோட்ட வேலைக்கு சென்ற சிறுவர், சிறுமியரைச் தேடிச் சென்று, பள்ளிக்கு அழைத்து வருவார். 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை, நத்தம்பட்டி, இடைநிலைப் பள்ளியில் சேர்த்து விடுவார்.

படிப்பறிவற்ற கிராம மக்களுக்கு, எழுதுகோலாகவும், தகவல் தொடர்பாளராகவும் செயல்பட்டார். தொலைதுாரத்தில் வசிக்கும் உறவினர்களுக்கு கடிதம் எழுத உதவுவார். வரும் கடிதங்களை படித்து தகவலை கூறுவார்.

கனத்த உடம்புள்ளவர் என்பதால், 'மொக்கை வாத்தியார்' என அழைப்பர் மக்கள். இவர் விதைத்த கல்வி, கிராமத்தில் ஆலமரமாக வளர்ந்துள்ளது.

தற்போது என் வயது, 72; அச்சுத்தொழில் செய்து வருகிறேன். அந்த ஆசிரியரின் நினைவு, இதயத்தில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

- எஸ்.ஏ.ஜெகநாதன், சிவகாசி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us