PUBLISHED ON : ஜூன் 15, 2018

அ நிறம் | அளவு
தேவையானப் பொருட்கள்:
முட்டை - 5
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
உருளைக்கிழங்கு - 2
குடைமிளகாய் - 1
கொத்தமல்லி தழை,
மிளகுப்பொடி - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
முட்டைகளை உடைத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி, நன்றாக அடித்து கலக்கவும். அத்துடன், ஒரு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து கொள்ளவும்.
உருளைக் கிழங்கை வேக வைத்து, தோலுரித்து, மசித்து முட்டை கலவையில் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய, வெங்காயம், குடைமிளகாய், கொத்தமல்லி தழை, மிளகுப் பொடி, உப்பு ஆகியவற்றையும் சேர்த்து, நன்கு கலந்துக் கொள்ளவும்.
சூடான தோசை தவாவில், எண்ணெய் தடவி, இந்த கலவையை, ஆம்லெட் போல் ஊற்றவும். வெந்ததும், திருப்பிப் போட்டு எடுத்தால், சுவையான,
'எக் பீட்சா' தயார்! குழந்தைகள் விரும்பி உண்பர்.
- ஐ.குல்சார், கடலுார்.
