PUBLISHED ON : டிச 20, 2013

கேக் என்பது அனைவரையும் ஈர்க்கும். அதுவும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பிறப்பு தினத்தில் மகிழ்ச்சியின் மறு அடையாளமாய் நம் வாய்கொள்ளாமல் நுழைக்கப்படுவதும் கேக்தான்.
சிலர் முட்டையை கூட உணவில் சேர்க்காத சுத்த சைவமாக இருப்பர். அவர்களுக்கான கேக் இது.
தேவையானவை: மில்க் மெய்டு- 1டின், மைதா மாவு - 200 கிராம், வெண்ணை-50 கிராம், ஆப்ப சோடா-1 தேக்கரண்டி, தண்ணீர் -3 மேசைக்கரண்டி, உலர்ந்த திராட்சை -10 கிராம், வெனிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி.
செய்முறை: மில்க் மெய்டை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் சலித்த மைதா மாவைப் போட்டு கட்டியில்லாமல் நன்றாக கலக்க வேண்டும். இந்தக் கலவையுடன் உருக்கிய வெண்ணையையும் ஊற்றிக் கலந்து கொள்ள வேண்டும். சோடாமாவை தண்ணீரில் கலந்து, கேக் கலவையில் விட வேண்டும். கடைசியாக வெனிலா எசன்ஸ், உலர்ந்த திராட்சை, சேர்த்து நன்றாக கலந்து கலவையை அலுமினியப் பாத்திரத்தில் ஊற்றி பேக் செய்தால், சுவையான மணமிக்க எக்லெஸ் கேக் தயார்.
