PUBLISHED ON : நவ 11, 2023

அ நிறம் | அளவு
ஆண்டு முழுதும் கிடைக்கிறது கத்தரிக்காய். இதை பிஞ்சாகவும் சாப்பிடலாம். உணவில் தக்காளிக்கு இணையானது. புரதம், கலோரி, தாது உப்புகள் நிறைந்தது.
இதன் தாயகம் இந்தியா. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயிர் செய்யப்படுவதாக வரலாற்று குறிப்புகள் உள்ளன. இந்தியா, ஆசிய நாடுகளான ஜப்பான், சீனாவில் முக்கிய உணவாக பயன்படுகிறது. அமெரிக்க உணவில் முதன்மையான, 22 காய்கறிகளில் இதுவும் ஒன்று.
