தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்! (223)

இளஸ் மனஸ்! (223)

இளஸ் மனஸ்! (223)


PUBLISHED ON : நவ 11, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 11, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள ஆன்டி...

என் வயது, 19; தனியார் கல்லுாரியில் படிக்கும் மாணவன். இந்தியாவில், மொத்தம் எத்தனை ஓ.டி.டி., தளங்கள் உள்ளன. ஓ.டி.டி., என்பதன் விரிவாக்கம் என்ன...

இதன் வருகையால், ஒட்டு மொத்த சினிமா தியேட்டர்களும் காணாமல் போய் விடுமா... இது, சினிமா தொழிலுக்கு நல்லதா... கெட்டதா... சிறுவர், சிறுமியர் குணநலங்களை பாதிக்குமா... இதில் உள்ள நல்லது கெட்டதுகளை பட்டியலிடுங்க...

இப்படிக்கு,

எம்.உண்ணாமலை.



அன்பு மகனுக்கு...

இந்தியாவில், மொத்தம், 40 ஓ.டி.டி., தளங்கள் உள்ளன. ஓ.டி.டி., என்றால், 'ஓவர் தி டாப்' என்பதன் சுருக்கம். இணையதளம் வழியாக, உலக சினிமாக்களை, வெப் சீரிஸ்களை, டாக் ஷோக்களை, கேம் ஷோக்களை, விளையாட்டு போட்டிகளை, அலைபேசிகளிலும், 'டிவி'யிலும் காட்டுவர்.

தற்போதுள்ள பிரதான ஓ.டி.டி., தளங்கள்...

* நெட் பிளிக்ஸ் - 18.9 கோடி சந்தாதாரர்கள்

* அமேசான் பிரைம் வீடியோ - 16.35 கோடி சந்தாதாரர்கள்

* டிஸ்னி ஹாட்ஸ்டார் - 6.13 கோடி சந்தாதாரர்கள்

* சோனி லிவ், சன் நெக்ஸ்ட, டிஸ்கவரி ப்ளஸ், ஈராஸ் நவ், ஜியோ சினிமா, அல்ட் பாலாஜி, எம்எக்ஸ் பிளேயர், உல்லு ஆப், தி வைரல் பீவர், ஆஹா போன்ற தளங்களும் உள்ளன.

அடுத்து வரும், 10 ஆண்டுகளில், 800 சதவீத சினிமா தியேட்டர்கள் காணாமல் போய் விடும். பார்களும், உணவகங்களும் இணைக்கப்பட்ட அதிநவீன தியேட்டர் காம்ப்ளக்ஸ்களும் மட்டுமே மிஞ்சும். எல்லா திரைப்படங்களும், ஓ.டி.டி., வழியே வெளியாகி விடும்.

கே.ஜி.எப் - 2 என்ற படம், ஓ.டி.டி.,யில் வெளியாகி, 320 கோடி ரூபாய் ஈட்டியது. பொதுவாக, படங்களின் தயாரிப்பு செலவை, ஓ.டி.டி., நிறுவனங்கள் கொடுத்து விலைக்கு வாங்குகின்றன.

கூடிய சீக்கிரம், 500 எபிசோடு மெஹா சீரியல்கள் காணாமல் போய், குறைந்த எபிசோடுள்ள வெப் சீரிஸ் முழுதும் ஆக்கிரமிக்கும். வெப் சீரிசுக்கு தணிக்கை இல்லாததால், ஆபாச காட்சிகளும், வசனங்களும் கூடி கும்மியடிக்கின்றன. சிறுவர், சிறுமியர் ஓ.டி.டி., பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.

தேவைப்பட்டால் கார்ட்டூன் படங்களை பெற்றோர் அனுமதியுடன், 'டிவி' திரைக்கு மாற்றி பார்க்கலாம்.

ஓ.டி.டி.,யை தவிர்த்து, டிஸ்கவரி சேனல், அனிமல் பிளானட், ஹிஸ்டரி, ட்ராவல் சேனல்களும் பிரைன்வேவ், அக்குயர் வயஸ், மைன்ட் ஸ்ட்ரீம், நிப்டி நாலஜ், திங்கரீஸ் டுல்கிட், ப்ரைன் ப்யூவல், இன்டெலிஜென்ட் ட்யூப் போன்ற அறிவார்ந்த யுடியூப் சேனல்களைப் பார்க்கலாம்.

செய்தி சார்ந்த கேளிக்கையே, இளைய தலைமுறைக்கு தேவை!

- அள்ளக்குறைய அன்புடன், பிளாரன்ஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us