தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தெரிஞ்சுக்கோங்க!

தெரிஞ்சுக்கோங்க!

தெரிஞ்சுக்கோங்க!


PUBLISHED ON : செப் 13, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 13, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மல்லிகை மலர்கள் மாலை நேரத்தில் ஏன் மலர்கின்றன?

தாவரங்களின் தண்டுகளில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் மற்றும் திசுக்களில் தோன்றும் அழுத்தம் காரணமாக அத்தாவரத்திலுள்ள தட்டையான பாகங்களில் வளர்ச்சி தோன்றுகிறது. செடியின் இலைகள், மலர்களின் இதழ்கள் போன்றவை தட்டையான பாகங்களுக்கு உதாரணமாகும். தாவரங்களின் வளர்ச்சி, சுற்றுப்புறச் சூழ்நிலை மாற்றங்களிலிருந்து பெறப்படும் ஒரு சமிக்ஞையாலேயே நடைபெறுகிறது. உதாரணமாக இருளிலிருந்து வெளிச்சம் தோன்றும் போது தாமரை மலர் மலர்கிறது. மல்லிகை மலரைப் பொறுத்தவரை வெளிச்சத்திலிருந்து இருளான சூழ்நிலைக்கு மாறும்போது மலர்ச்சி நடைபெறுகிறது. மலர் இதழ்களின் மேற்புறத்தில் வளர்ச்சி தோன்றினால் மலர்களின் இதழ்கள் மலர்கின்றன. இதழ்களின் அடிப்புறத்தில் வளர்ச்சி தோன்றினால் மலரின் இதழ்கள் மேல் நோக்கி குவிந்து மூடிக் கொள்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us